ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பித்த அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் ஹால் டிக்கெட் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் http://www.trb.tn.nic.in  பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த இணையத்தளத்தில் விண்ணப்ப எண் அல்லது விண்ணப்பதாரரின் பெயர் மற்றும் பிறந்த தேதியைக் குறிப்பிட்டு ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். ஒரு சில விண்ணப்பதாரர்கள் விண்ணப்பத்தில் தங்கள் புகைப்படத்தை ஒட்டவில்லை. எனினும் அத்தகைய விண்ணப்பதாரர் களுக்கும் ஹால் டிக்கெட் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. அவர்கள் புகைப்படம் இல்லாத ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்வதுடன் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள ஒரு சிறப்பு படிவத்தையும் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். அந்த படிவத்தில் தேவையான விவரங்களை குறிப்பிட்டு தங்கள் பாஸ்போர்ட் அளவுள்ள புகைப்படத்தை ஒட்டி அந்த படிவத்தில் அரசிதழ் பதிவுபெற்ற அரசு அதிகாரியிடம் (Gazetted Officer) சான்றொப்பம் பெற வேண்டும். தேர்வு நேரத்தின்போது அந்த படிவத்தையும் ஸ்டாம்ப் அளவுள்ள புகைப்படத்தையும் தேர்வுக் கூட மேற்பார்வையாளரிடம் ஒப்படைக்க வேண்டும்.