இந்தியா

1.புதுடெல்லியில் அமைக்கப்பட்டுள்ள நாட்டின் முதல் அனைத்திந்திய ஆயுர்வேத மையத்தை பிரதமர் துவக்கி வைத்துள்ளார்.
2.டாடா குழுமம் மற்றும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸின் கூட்டு நிறுவனமான விஸ்தாரா விமான சேவை நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக லெஸ்லி டங் பொறுப்பேற்றுள்ளார்.
3.மராட்டிய கிராம பஞ்சாயத்து தேர்தல் வரலாற்றில் முதன் முறையாக திருநங்கை ஒருவரும் வெற்றி பெற்றிருக்கிறார். அவரது பெயர் தியானதேவ் சங்கர் காம்பிளே.சோலாப்பூர் மாவட்டம் மல்சிராஸ் தாலுகா தாரங்க்பால் கிராம பஞ்சாயத்து தலைவராக அவர் தேர்வாகி இருக்கிறார்.


உலகம்

1.2017ம் ஆண்டுக்கான Man Booker பரிசு பெற்ற நாவல். இந்த பரிசை பெற்ற 2வது அமெரிக்கர் ஜார்ஜ் ஷாண்டர்ஸ் ஆவார்.
2.இங்கிலாந்தில் உள்ள மெரிலிபேன் கிரிக்கெட் கிளப் உலக கிரிக்கெட் கமிட்டி ( MCC world cricket committee ) உறுப்பினராக பங்களாதேஷ் வீரர் ஷாகிப் அல் ஹசன் நியமிக்கப்பட்டுள்ளார்.MCC கிளப்பில் சேர்க்கப்பட்டுள்ள முதல் பங்களாதேஷ் வீரர் என்ற பெருமையை ஷாகிப் அல் ஹசன் பெற்றுள்ளார்.


விளையாட்டு

1.எகிப்து நாட்டில் நடைபெற்று வரும் ஜூனியர் மற்றும் கேடட் ஓபன் டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய வீராங்கனையான செலினா செல்வகுமார் , பெண்கள் ஒற்றையர் , இரட்டையர் மற்றும் கலப்பு இரட்டையர் பிரிவுகளில் மூன்று தங்கப்பதக்கங்களை வென்றுள்ளார்.
2.ஜப்பானின் காகாமிகாஹாரா நகரில் நடைபெற உள்ள மகளிர் ஆசிய கோப்பை ஹாக்கி தொடரில் கலந்து கொள்ளும் இந்திய அணிக்கு ராணி ராம்பால் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
3.இந்தோனேசியா கால்பந்து லீக் போட்டியில் செமன் படாங் அணிக்கு எதிராக பெர்செலா அணி ஆட்டத்தின் போது சக வீரருடன் மோதிக்கொண்டதில் இந்தோனேசிய கோல் கீப்பர் சொய்ருல் ஹூடா மரணமடைந்தார்.


இன்றைய தினம்

1.2001 – ஆப்பிள் நிறுவனத்தின் ஐப்பேடு வெளியிடப்பட்டது.

 

–தென்னகம்.காம் செய்தி குழு