இந்தியா

1.தீபாவளி பண்டிகை நாளில் நாட்டில் மிகவும் மாசுபட்ட நகரம் என்ற பெயரை ராஜஸ்தான் மாநிலத்தின் பிவாண்டி பெற்றுள்ளது.அதிகபட்சமாக ஒரு கியூபிக் மீட்டர் காற்றில் 425 மைக்ரோ கிராம் மாசுக்களுடன் பிவாண்டி முதலிடம் பிடித்தது. இந்நகரம் ராஜஸ்தான் மாநிலத்தின் ஆல்வர் மாவட்டத்தை சேர்ந்தது.
மிகவும் மாசுபட்ட நகரங்கள் பட்டியலில் இரண்டாமிடத்தை மேற்குவங்க மாநிலத்தின் கொல்கத்தாவும் மூன்றாம் இடத்தை உத்தரபிரதேச மாநிலத்தின் ஆக்ராவும் பிடித்துள்ளன.ஒரு கியூபிக் மீட்டர் காற்றில் கொல்கத்தாவில் 358 மைக்ரோ கிராம் மாசுக்களும் ஆக்ராவில் 332 மைக்ரோ கிராம் மாசுக்களும் கண்டறியப்பட்டுள்ளன.
2.இந்திய திரைப்பட திறனாய்வு கழகம், சென்னையில் உள்ள ரஷ்ய அறிவியல் மற்றும் கலாச்சார மையத்துடன் இணைந்து நடத்தும் ” பிரிக்ஸ் திரைப்பட திருவிழா ” ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள ரஷ்ய கலாச்சார மையத்தில் அக்டோபர் 25, 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் நடைபெற்றது.
3.ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதிராக , 1817 மார்ச் 29ல் ஓடிஷாவில் நடைபெற்ற ” பைக்கா கிளர்ச்சி “யே இந்தியாவின் முதல் விடுதலைப் போராட்ட கிளர்ச்சி என்று இனிவரும் ஆண்டுகளில் பாடப்புத்தகங்களில் குறிப்பிடப்படும் என மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் அறிவித்துள்ளார்.
4.மகாரஷ்டிரா மாநிலம், Palghar மாவட்டத்தில் உள்ள கோவர்தன் சுற்றுச்சூழல் கிராமத்திற்கு ( Govardhan Eco Village ) பசுமை பிளாட்டினம் விருது வழங்கப்பட்டுள்ளது.
5.வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள 7 மாத ஆண் சிங்கக் குட்டிக்கு விஷ்ணு என்று தமிழக முதல்வர் அவர்கள் பெயர் சூட்டியுள்ளார்.
6.மத்திய வர்த்தகத்துறை சார்பில் சுவீடன் நாட்டில் Make in India : Sweden 2017 என்ற நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது. இதில் மத்திய வர்த்தக அமைச்சர் சுரேஷ் பிரபு கலந்துகொண்டுள்ளார்.
7.வறட்சியை தடுக்க ரூபாய் 50,000 கோடி செலவில் அடுத்த ஐந்து ஆண்டுகளில் Pradhan Mantri Krishi Sinchai Yojana (PMKSY) என்ற திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
8.டைம் நாளிதழ் வெளியிட்டுள்ள அடுத்த தலைமுறை தலைவர்கள் – 2017 பட்டியலில் டெல்லி பல்கலைகழக மாணவி குர்மேகர் கவுர் இடம்பெற்றுள்ளார்.
9.இந்தியாவில் அதிகளவு கேன்சர் நோயாளிகள் உள்ள மாநிலங்களில் ஹரியானா முதலிடம் வகிக்கிறது.


விளையாட்டு

1.மக்காவ் ஓபன் கோல்ப் போட்டியில் இந்திய வீரர் ககன்ஜீத் புல்லார் சாம்பியன் கோப்பையை வென்றுள்ளார்.இது இவரது எட்டாவது ஆசிய பட்டம் ஆகும்.


இன்றைய தினம்

1.1834 – முதன்முதலாக இந்தியாவில் இருந்து 75 ஒப்பந்தத் தொழிலாளர்கள் மொரீசியஸ் சென்றனர்.
2.1936 – பிபிசி நிறுவனம் தொலைக்காட்சி சேவையை ஆரம்பித்தது.

 

–தென்னகம்.காம் செய்தி குழு