இந்தியா

1.உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நீரிழிவு எனும் சர்க்கரை நோயாளிகள் எண்ணிக்கையில், உலகின் தலைநகர் எனக் கூறும் வகையில், இந்தியா முதலிடத்தில் உள்ளது.நாடு முழுவதும், 6.92 கோடி பேர், நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
2.தமிழகத்தில், ‘108’ அவசர கால மைய கட்டுப்பாட்டு அறைக்கு, விபத்து குறித்து தகவல் தெரிவிக்க, புதிதாக வடிவமைக்கப் பட்டுள்ள, ” அவசரம் 108 செயலி ” என்ற மொபைல் ஆப்பை முதல்வர் பழனிசாமி, துவக்கி வைத்துள்ளார்.
3.இந்தியா மற்றும் கசகஸ்தான் இணைந்து மேற்கொள்ளும் 2வது ராணுவ பயிற்சி Prabal Dostyk – 2017 ஹிமாச்சல பிரதேசத்தில் நடைபெறுகிறது.
4.வால்மார்ட் நிறுவனம் முதன் முதலாக மும்பை அருகே பிந்த்வாடியில், Best Price என்ற பெயரில் விற்பனை மையம் நிறுவியுள்ளது.45,000 சதுர அடி பரப்பளவிலான இந்த மிகப்பெரிய விற்பனை மையத்தில் வீட்டு உபயோக பொருட்கள் உட்பட நுகர்வோருக்கான அனைத்தும் கிடைக்கும். ஆனால் இங்கிருந்து மக்களுக்கு நேரடியாக விற்பனை செய்யப்பட மாட்டாது. வியாபாரிகளுக்கு ஆர்டரின் பேரில் சப்ளை செய்யப்படும். ஆன்லைன் மூலமாகவும் ஆர்டர் செய்து பெறலாம்.
5.யுனெஸ்கோ வழங்கும் 2017க்கான ஆசிய பசுபிக் கலாச்சார பாரம்பரிய பாதுகாப்பு விருது , மும்பையில் அமைந்துள்ள ராயல் ஓபரா மாளிகைக்கு வழங்கப்பட்டுள்ளது.
6.இந்தியாவின் முதல் கறுப்பின மான்கள் சரணாலயம் அலகபாத்தில் அமைக்கப்படும் என உ.பி. அரசு அறிவித்துள்ளது.


உலகம்

1.உலகின் மூன்றாவது மிகப்பெரிய புத்தக திருவிழா சார்ஜாவில் துவங்கியுள்ளது.இதன் கருப்பொருள் – A World in My Book ஆகும்.யுனெஸ்கோ சார்பில் 2019ம் ஆண்டுக்கான உலக புத்தக தலைநகராக, ஷார்ஜா அறிவிக்கப்பட்டுள்ளது.
2.11வது ஓர் பாலினத்தவர்களுக்கான விளையாட்டு போட்டி 2022ல் ஹாங்காங்கில் நடைபெறவுள்ளது .இந்த போட்டி ஆசிய நகரம் ஒன்றில் நடைபெறபோவது இதுவே முதன்முறையாகும்.
3.அமெரிக்காவின் பொருளாதார துறைக்கான துாதரக பொறுப்பாளராக, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மனிஷா சிங்கை, அதிபர் டிரம்ப் நியமித்துள்ளார்.


இன்றைய தினம்

1.1889 – வாஷிங்டன் ஐக்கிய அமெரிக்காவின் 42வது மாநிலமாகச் இணைக்கப்பட்டது.
2.1919 – இலங்கைத் தேசிய காங்கிரஸ் அமைக்கப்பட்டது.

 

–தென்னகம்.காம் செய்தி குழு