இந்தியா

1.பஞ்சாப் மாநிலம், பாட்டியாலாவில் விளையாட்டு பல்கலைக்கழகம் உருவாக்குவதற்கான அடிப்படை கூறுகளை ஏற்படுத்துவதற்கு, சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி உறுப்பினர் ரந்திர் சிங் தலைமையில் குழு ஒன்றை பஞ்சாப் முதல்வர் ஏற்படுத்தியுள்ளார்.
2.இந்திய வெளியுறவுத்துறை ஏற்பாடு செய்த முதலாவது இந்தியா – அமெரிக்கா கடல்சார் பேச்சுவார்த்தை கோவாவில் நடைபெற்றுள்ளது.
3.சர்வதேச வளைவு பாத மாநாட்டை, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் புதுடெல்லியில் துவக்கி வைத்துள்ளார்.
4.சர்வதேச பசுமை திரைப்படவிழா, 9வது CMS Vatavaran புதுடெல்லியில் நடைபெறுகிறது.இதன் கருப்பொருள் – Conservation 4 Water ஆகும்.
5.தேசிய பென்சன் திட்டத்தில் சேருவதற்கான வயதை 60லிருந்து 65ஆக உயர்த்தி மத்திய நிதியமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
6.தங்க பத்திரத்தில் முதலீடு செய்யும் தங்கத்திற்கு ஒரு கிராம் ஒன்றிற்கு ரூபாய் 2,945 என மத்திய அரசு விலை நிர்ணயம் செய்துள்ளது.
7.மலையாள இலக்கியத்திற்கு சிறப்பான பங்களிப்பை வழங்கியதற்காக K. சச்சிதானந்தம் , எழுத்தச்சன் புஷ்கரம் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.


உலகம்

1.பல நாடுகளுடன் இணைந்து இஸ்ரேல் மேற்கொள்ளும் Blue Flag – 17 விமானப்படை பயிற்சியில் இந்திய விமானப்படையும் கலந்து கொண்டுள்ளது.
2.தங்க பத்திரத்தில் முதலீடு செய்யும் தங்கத்திற்கு ஒரு கிராம் ஒன்றிற்கு ரூபாய் 2,945 என மத்திய அரசு விலை நிர்ணயம் செய்துள்ளது.


விளையாட்டு

1.20 சுற்றுகளை கொண்ட ‘பார்முலா 1’ கார் பந்தயத்தில் இங்கிலாந்து வீரர் லீவிஸ் ஹேமில்டன், நான்காவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.இந்த சீசனில் (2017) ஹேமில்டன் 9 பந்தயங்களில் வெற்றி பெற்றுள்ளார்.இதற்கு முன்பு 2008, 2014, 2015 ஆண்டுகளில் பட்டம் பெற்றுள்ளார்.


இன்றைய தினம்

1.இன்று உலக அறிவியல் தினம் (World Science Day).
உலக அறிவியல் தினம் 1994ஆம் ஆண்டு நவம்பர் 10 அன்று முதன்முதலாக கொண்டாடப்பட்டது. இத்தினம் உலக அமைதி மற்றும் வளர்ச்சிக்காகவே கொண்டாடப்படுகிறது. அறிவியல் மக்களுக்கே, அறிவியல் நாட்டிற்கே என்கிற விழிப்புணர்வை ஏற்படுத்தவே இத்தினம் கொண்டாடப்படுகிறது. சிறந்த ஆய்வுகளில் ஈடுபடும் இளம் விஞ்ஞானிகளுக்கு யுனெஸ்கோ விருதுகள் வழங்கி இத்தினத்தில் கௌரவிக்கிறது.

 

–தென்னகம்.காம் செய்தி குழு