தமிழகம்

1.தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் பொறுப்பு வகித்து வந்த ஆர்.முத்துக்குமாரசாமி, தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதால் புதிய தலைமை வழக்கறிஞராக விஜய நாராயணன் நியமிக்கப்பட்டுள்ளார்.


இந்தியா

1.முதலாவது ஊரக விளையாட்டு போட்டி (கிராமின் கேல் மகேத்சவ்)(1st Rural Games or Grameen Khel Mahotsav) புதுடெல்லியில் ஆகஸ்ட் 28 முதல் செப்டம்பர் 03 வரை நடைபெறுகிறது.
2.பள்ளிகளில் இருந்து மின்னணு கழிவுகளை (e – waste disposal scheme) அகற்றும் திட்டம் கேரளாவில், கொச்சியில் துவங்கப்பட்டுள்ளது.
3.பல்வேறு துறைகளின் வளர்ச்சிக்கு செயற்கை நுண்ணறிவுத்திறனை (Artificial Intelligence) உபயோகிப்பதை பற்றி ஆராய சென்னை IIT பேராசிரியர் டாக்டர்.V. காமகோடி தலைமையில் 18 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
4.ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அவர்களின் செயலாளராக சஞ்சய் கோத்தாரி , ஊடக செயலாளராக அசோக் மாலிக் மற்றும் சமூக செயலாளராக ரந்தீர் குமார் ஜெய்ஸ்வால் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
5.ராஜஸ்தான் மாநிலம், கோட்டா நகரில் சம்பல் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள 6 வழிச்சாலை பாலத்தை பிரதமர் மோடி திறந்து வைத்துள்ளார்.இது கம்பி வடங்களால் இணைக்கப்பட்ட தொங்கு பாலம் (cable-stayed hanging bridge) ஆகும்.இந்த பாலத்தின் நீளம் 1.4 KM., இதன் உயரம் 60 மீட்டர். இதன் இரண்டு தூண்களுக்கு இடையிலான தூரம் 350 மீட்டர் ஆகும்.


உலகம்

1.ஆகஸ்ட் 31 – செப்டம்பர் 09 வரை பிரேசிலில் Festival Of India என்ற பெயரில் பல்வேறு கலாச்சார விழாக்கள் நடைபெற உள்ளது.
2.ஆஸ்திரேலியா வர்த்தக அமைச்சகம் சார்பில் இந்தியாவில், இரண்டாவது ஆஸ்திரேலியா வர்த்தக வாரம் ஆகஸ்ட் 28 முதல் செப்டம்பர் 01 வரை கடைபிடிக்கப்பட்டது.


விளையாட்டு

1.ITTF சார்பிலான உலக கோப்பை டேபிள் டென்னிஸ் போட்டிகள் 2018 பிப்ரவரியில் லண்டனில் நடைபெற உள்ளது.
2.இந்த ஆண்டுக்கான அர்ஜூனா விருது பெற்றவர்களில் 3 பேர் தமிழகத்தை சார்ந்தவர்கள் ஆவார்கள்.மாரியப்பன் (பாராலிம்பிக் வீரர்),ஆரோக்கிய ராஜிவ் (தடகள வீரர்) ,அமல்ராஜ் (டேபிள் டென்னிஸ் வீரர்).


இன்றைய தினம்

1.1976 – நாசாவின் வைக்கிங் 2 விண்கலம் செவ்வாய்க் கோளில் இறங்கி செவ்வாயின் மிகக் கிட்டவான வண்ணப் படங்களை பூமிக்கு அனுப்பியது.

 

– தென்னகம்.காம் செய்தி குழு