இந்தியா

1.இந்தியாவில் நடைபெற உள்ள 17 வயதுக்குட்பட்டவர்களின் உலக கோப்பை கால்பந்து போட்டியின் அதிகாரபூர்வ பாடலுக்கு ப்ரீதம் இசை அமைத்துள்ளார்.
2.K.K. பிர்லா பவுண்டேசன் வழங்கும், 2016ம் ஆண்டுக்கான சரஸ்வதி சம்மான் விருது கொங்கனி எழுத்தாளர் மகாபலேஷ்வர் சில் , Hawthan என்ற நாவலுக்காக பெற்றுள்ளார்.2015 – பத்மா சச்தேவ் ( டோக்ரி மொழி ),2014 – வீரப்பமொய்லி ( கன்னடா ) ,2013 – கோவிந்த் மிஸ்ரா ( ஹிந்தி ) ஆகியோர் முன்னதாக இந்த விருதை பெற்றுள்ளனர்.
3.தேசிய ஊட்டச்சத்து வாரம் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 1 முதல் செப்டம்பர் 7 வரை கடைபிடிக்கப்படுகிறது.
4.மியன்மார் நாட்டில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகோடாஸ் எனப்படும் கோவில்களை புதுப்பித்து தர இந்தியா ஒப்புதல் அளித்துள்ளது.
5.அஸ்ஸாம் மாநில அரசு , சீக்கிய மதத்திற்கு குறு சிறுபான்மை இன (Micro minority) அந்தஸ்து வழங்கியுள்ளது.
6.கேரளாவில் உள்ள ஸ்ரீ வடகுன்னதன் கோவிலை சிறப்பான முறையில் பாதுகாப்பதற்காக, UNESCO நிறுவனம் , இந்தியாவிற்கு Award Of Execelence 2015 வழங்கியுள்ளது.
7.14வது நிதி கமிசன் மூலமாக அடுத்த ஐந்து ஆண்டுகளில் பீகாருக்கு மூன்று லட்சத்து எழுபத்தி நான்காயிரம் கோடி வழங்கப்படும் என பிரதமர் அறிவித்துள்ளார்.
8.கர்நாடகா மாநில அரசு பெண் குழந்தைகளுக்கு அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்களில் பட்ட மேற்படிப்பு வரை இலவச கல்வி வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.


விளையாட்டு

1.இந்திய ஹாக்கி அணியின் பயிற்சியாளர் ரோலண்ட் ஒல்ட்மன்ஸ் பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
2.இந்தியா கூடைப்பந்து அணியின் கேப்டன் அம்ரித்பால் சிங்கை , ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னி கிங்ஸ் அணி ஒப்பந்தம் செய்துள்ளது.


இன்றைய தினம்

1.இன்று உலக எழுத்தறிவு தினம் (International Literacy Day).
அனைவருக்கும் எழுத்தறிவு என்கிற வரலாற்றுச் சிறப்புமிக்க கோட்பாட்டை உலகளவில் யுனெஸ்கோ உருவாக்கியது. அதன் அடிப்படையில் உலக எழுத்தறிவு தினம் 1965ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்டது. கல்வியறிவின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியும், அனைவருக்கும் எழுத்தறிவை போதிக்க வேண்டும் என்கிற நோக்கத்துடன் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 8 அன்று இத்தினம் கொண்டாடப்படுகிறது.
2.1959 – ஆசியத் தொழில்நுட்பக் கழகம் பாங்காங் நகரில் நிறுவப்பட்டது.

 

– தென்னகம்.காம் செய்தி குழு