இந்தியா

1.இணையவாயில் மூலம் நாடு முழுவதுமுள்ள அனைத்து ஆசிரியர்களும் மேம்பட்ட டிஜிட்டல் தொழில் நுட்பத்துடன் தங்களை வளர்த்துக் கொள்ள, மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் ஆசிரியர்களுக்கு தீக்ஷா (DIKSHA Portal ) என்ற இணைய வாயிலை ஆரம்பித்துள்ளது.
2.இந்திய மின்சக்தி அமைச்சகத்தின்கீழ் இயங்கும் ஆற்றல் சேமிப்பு சேவைகள் நிறுவனம் மலேசியாவின் மேலகா (Melaka) மாநிலத்தில் உஜாலா (UJALA – Unnat Jyoti by Affordable Lighting for All) என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
3.நிதி ஆயோக் அமைப்பு நாட்டில் ஏற்றுமதியை அதிகப்படுத்தி வேலைவாய்ப்பிற்கு பெரிய ஊக்கத்தை ஏற்படுத்த வேலைவாய்ப்பு மற்றும் ஏற்றுமதிக்கான சிறப்பு நிபுணர் குழுவை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிபுணர் குழுவின் தலைவராக நிதி ஆயோக்கின் துணைத் தலைவராக உள்ள டாக்டர் ராஜீவ் குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
4.அறிவுசார் சொத்துரிமைகள் ஊக்குவிப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பு (Cell for IPR Promotions & Management – CIPAM), தொழில் கொள்கை மற்றும் ஊக்குவிப்பு துறை ஆகியவற்றின் சார்பில், அறிவுசார் சொத்துரிமைகளின் (Intellectual Property Rights) முக்கியத்துவத்தைப் பற்றி மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தவும், இந்திய புவிசார் குறியீடுகளை மேம்படுத்தவும் ‘அறிவுசார் சொத்துரிமைகளைப் பற்றி பேசுவோம் ‘ (LetsTalkIP) என்ற பெயரில் சமூக ஊடக பிரச்சாரம்   தொடங்கப்பட்டுள்ளது .
5.மேற்கு தொடர்ச்சி மலைகளின் கேரளப் பகுதியில் , இரண்டு வகைப் பழங்கால மண்புழுக்கள் கண்டறியப்பட்டுள்ளன.இந்த இரண்டு வகை மண்புழுக்களுக்கு திராவிடா பாலிடைவர்டிகுலேடா (Drawida polydiverticulata ) மற்றும் திராவிடா டோமாசி (Drawida thomasi) என்று பெயரிடப்பட்டுள்ளது.கேரளா மாநிலத்தில் திராவிடா பேரினத்தைச் சேர்ந்த பதினாறு மண்புழுக்கள் உள்ளன.இந்தியத் துணைக் கண்டத்தில் திராவிடா பேரினங்களைச் (Drawida genus) சேர்ந்த 73 இனங்கள் வாழ்வது உறுதி செய்யப்பட்டுள்ளது.திராவிடா பாலிடைவர்டிகுலேடா மண்புழுக்களின் முன் பகுதியில் டைவர்டிகுழுமஸ் (diverticulums) எனும் பிரத்யேக பிளவுத்துண்டுகள் அமைந்திருக்கும். திராவிடா பேரினங்களில் இது தனித்துவமான உடல் உறுப்பு ஆகும்.


உலகம்

1.3rd Eastern Economic Forum மாநாடு ரஷ்யாவின் விளாடிவோஸ்டாக் நகரில் செப்டெம்பர் 6 முதல் செப்டெம்பர் 7 வரை நடைபெற்றது. இந்தியா சார்பில் வெளியுறவுத் துறை அமைச்சர்கள் இந்த மாநாட்டில் கலந்து கொண்டனர்.
2.முதன்முதலில், அமெரிக்காவின் அரிசோனா மாநிலப் பல்கலைகழகத்தைச் (ASU) சேர்ந்த விஞ்ஞானிகள், தாவரம் சார்ந்த சிகா தடுப்பூசியை உருவாக்கியுள்ளனர்.புகையிலைத் தாவரத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட இந்த தடுப்பூசி முக்கிய புரதமான DIII யை குறிவைக்கிறது. இப்புரதமானது ஜிகா (Zika) வைரஸை வெளிப்புறமாக சூழ்ந்து மறைக்கிறது. மேலும் வைரஸ் நோய் தொற்றிலும் முக்கிய பங்கு வகிக்கிறது.இது சிகா நோய்க்காக உருவாக்கப்பட்ட பிற மருந்துகளை விட அதிக சக்திவாய்ந்த, பாதுகாப்பான மற்றும் மலிவானதாகவும் இருக்கும்.


இன்றைய தினம்

1.1893 – முதலாவது உலக சமய நாடாளுமன்ற மாநாடு சிக்காகோவில் ஆரம்பமானது.

 

– தென்னகம்.காம் செய்தி குழு