இந்தியா

1.சீர்மிகு விவசாய மாநாடு,புதுடெல்லியில் ஆகஸ்ட் 30 & ஆகஸ்ட் 31-ஆம் தேதி நடைபெற்று முடிவடைந்துள்ளது.
2.UPSC தேர்வில் வெற்றி பெற்று IAS , IPS & IFS ( forest ) பணியிடம் பெறுபவர்களுக்கு இதுவரை மாநில வாரியான ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது.இந்த நடைமுறை ஒழிக்கப்பட்டு இனி 2018 முதல் மண்டல வாரியான ஒதுக்கீடு வழங்கப்பட இருக்கிறது.அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் 5 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.மண்டலம் – 01 —- அருணாச்சல் , கோவா, மிசோரம், யூனியன் பிரதேசங்கள், ஜம்மு & காஷ்மீர், ஹிமாச்சல், ராஜஸ்தான், பஞ்சாப், உத்ரகாண்ட் மற்றும் ஹரியானா.மண்டலம் – 02 —- உத்திர பிரதேசம், பீகார், ஜார்கண்ட் மற்றும் ஒடிஷா,மண்டலம் – 03 —- மத்திய பிரதேசம், சட்டீஸ்கர், குஜராத் மற்றும் மகாராஷ்டிரா,மண்டலம் – 04 —- மேற்கு வங்காளம், அஸ்ஸாம், சிக்கிம் , மேகாலயா, மணிப்பூர் , திரிபுரா மற்றும் நாகாலாந்து,மண்டலம் – 05 —- தமிழ்நாடு , கேரளா, கர்நாடகா, தெலுங்கானா மற்றும் ஆந்திரா.
3.ஹன்ஸ்டா சௌவேந்திர ஷேகர் எழுதிய The Adivasi Will Not Dance என்ற புத்தகத்திற்கு ஜார்கண்ட் மாநில அரசு தடை விதித்துள்ளது.இந்த புத்தகம் வெளிவந்து 2 ஆண்டுகள் ஆகிறது.
4.ஹைதராபாத் நகரில் சாலை போக்குவரத்தை பாதுகாப்பானதாக மாற்றக்கூடிய முன் வரைவுகள் , திட்டங்கள் , ஆலோசனைகளை வரவேற்க தெலுங்கானா மாநில அரசு World Resources Institute India – Ross Centre மற்றும் Indian School of Business ஆகியவற்றுடன் இணைந்து Smart Streets Lab என்ற திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.இதில் பொதுமக்கள், நிறுவனங்கள், தன்னார்வ அமைப்புகள் தங்கள் கருத்துகளை / திட்டங்களை தெரிவிக்கலாம்.
5.ஹரியானாவின் குருகிராமில் நடைபெற்ற திருநங்கைகளுக்கான அழகி போட்டியில் Miss Trans Queen India-வாக கொல்கத்தாவைச் சேர்ந்த நிடாஷா பிஸ்வாஸ் வெற்றி பெற்றுள்ளார்.இரண்டாவது இடத்தை மணிப்பூரின் Loiloi யும்,மூன்றாவது இடத்தை சென்னையின் K. ரகசியாவும் பிடித்துள்ளன.


உலகம்

1.டோக்கியோவில் நடைபெற்ற சர்வதேச இறுதிச் சடங்கு மற்றும் இடுகாடு கண்காட்சியில் (Life Ending Industry Expo) புத்த மத கோட்பாடுகளின் படி இறுதிச் சடங்குகளை செய்யக்கூடிய இயந்திர மனிதன் Pepper அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
2.இந்தோ – ஜப்பான் உறவை வலுப்படுத்தியதற்காக, தமிழகத்தைச் சேர்ந்த தொழிலதிபர் குமாருக்கு ஜப்பான் வெளியுறவு அமைச்சகம் விருது வழங்கி கவுரவித்துள்ளது.
3.தென்கொரியாவில் இருந்து தங்கம், மற்றும் வெள்ளி பொருட்களை இறக்குமதி செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.இந்தியா தென்கொரியா இடையே தடையற்ற வர்த்தகம் செய்ய ஒப்பந்தம் ஏற்கனவே அமலில் உள்ளது. GST அமல் செய்யப்பட்ட பின் வரத்தகர்கள் இந்த வசதியை பயன்படுத்தி தென்கொரியாவில் இருந்து அதிகளவிலான தங்கம் இறக்குமதி செய்ததால் தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது.மேலும் director general of foreign trade (DGFT) ல் தகுந்த முன் அனுமதி பெற்று தென்கொரியாவில் இருந்து தங்கம் இறக்குமதி செய்யலாம் என்று கூறப்பட்டுள்ளது.
4.பிளாஸ்டிக் பை உபயோகிப்பதை கென்யா தடை செய்துள்ளது.மீறினால் ரூ.25 லட்சம் ( 38,000 அமெரிக்க டாலர்கள் அல்லது 32,000 யூரோக்கள் ) அபராதம் அல்லது 4 ஆண்டுகள் சிறை தண்டனை என அறிவித்துள்ளது.


விளையாட்டு

1.இந்தோனேஷியாவில் நடைபெற்ற 5வது ஆசிய பள்ளி டென்னிஸ் போட்டியில் தமிழகத்தின் R.S. ராஜேஸ் கண்ணன் வெண்கல பதக்கம் வென்றுள்ளார்.


இன்றைய தினம்

1.1897 – வட அமெரிக்காவின் முதலாவது சுரங்கத் தொடருந்து சேவை பொஸ்டனில் ஆரம்பிக்கப்பட்டது.

 

– தென்னகம்.காம் செய்தி குழு