இந்தியா

1.தெலுங்கானா மாநிலத்தின் ஐதராபாத் நகரில் 15 ஆயிரத்துக்கு மேற்பட்ட பள்ளி மாணவர்கள் ஒன்றாக இணைந்து சாலையை தூய்மையாக்கியதை உலக சாதனையாக கின்னஸ் சாதனை புத்தகம் பதிவுசெய்து சான்றிதழ் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
2.தெலுங்கானாவில் கைதிகள் எண்ணிக்கை குறைந்ததால் மூடப்பட்ட கிளைச்சிறைகளை மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், ஆதரவற்றோர்களுக்கான இல்லமாக மாற்ற அம்மாநில சிறைத்துறை முடிவுச் செய்துள்ளது.


உலகம்

1.ஆய்வு நிறுவனமான நியூ வேர்ல்டு வெல்த் சர்வதேச அளவில் செல்வச் செழிப்பு மிக்க 15 நகரங்களை வரிசைப்படுத்தி பட்டியல் ஒன்றை வெளியிட்டுள்ளது. ஒவ்வொரு நகரத்திலும் வசிக்கும் அனைத்து தனிநபர்களின் ஒட்டுமொத்த சொத்து மதிப்பு அடிப்படையில் இந்தப் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் இந்தியாவின் பொருளாதார தலைநகரான மும்பை 12-வது இடத்தைப் பிடித்துள்ளது.
நியூயார்க் 3 லட்சம் கோடி டாலர் சொத்து மதிப்புடன் முதலிடத்தில் உள்ளது. லண்டன் இரண்டாவது இடத்திலும் (2.7 லட்சம் கோடி டாலர்), டோக்கியோ (2.5 லட்சம் கோடி டாலர்) மூன்றாவது இடத்திலும் உள்ளன.
2.அரசு முறை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி ஐக்கிய அமீரகத்தின் அபுதாபி நகரில் கட்டப்படும் முதல் இந்துக்கோவிலான ஸ்ரீ அக்‌ஷார் புருசோத்தம் ஸ்வாமிநாராயன் சன்ஸ்தா ஆலையத்திற்கு அடிக்கல் நாட்டினார்.


விளையாட்டு

1.ஜூனியர் உலகக்கோப்பையில் 149 கிலோ மீட்டர் வேகத்தில் பந்து வீசி அசத்திய நகர்கோட்டிக்கு ராஜஸ்தான் அரசு 25 லட்சம் ரூபாய் பரிசு அறிவித்துள்ளது.
2.ஆஸ்திரேலியா அணி கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் இந்த வருடத்திற்கான சிறந்த டெஸ்ட் வீரருக்கான ஆலன் பார்டர் விருதை பெற்றுள்ளார்.இந்த வருடத்திற்கான விழா மெல்போர்ன் நகரில் நேற்று நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.


இன்றைய தினம்

1.இன்று உலக வானொலி தினம் (World Radio Day).
ஐக்கிய நாடுகள் சபையில் 1946ஆம் ஆண்டு பிப்ரவரி 13 அன்று வானொலி நிறுவப்பட்டது. யுனெஸ்கோவின் 36ஆவது பொதுச்சபைக் கூட்டத்தில் 2011ஆம் ஆண்டு நவம்பர் 3 அன்று உலக வானொலி தினம் அறிவிக்கப்பட்டது. 2012ஆம் ஆண்டு முதல் ஐ.நாவின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பான யுனெஸ்கோ பிப்ரவரி 13ஆம் தேதியை உலக வானொலி தினமாகக் கடைப்பிடிக்கிறது.

 

–தென்னகம்.காம் செய்தி குழு