இந்தியா

1.ஜார்க்கண்ட் மாநில சட்டசபையின் பா.ஜ.க.வை சேர்ந்த பீம்லா பிரதான் இந்த ஆண்டின் சிறந்த எம்.எல்.ஏவாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
2.பெண்களை கவரும் வகையில் பிரிட்ஜ், வாஷிங்மெஷின், ஏர்கண்டி‌ஷன் ஆகியவற்றின் ஜி.எஸ்.டி. வரியை குறைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.அடுத்த ஜி.எஸ்.சி. கவுன்சில் கூட்டம் நடக்கும் போது வரி குறைப்பு செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


உலகம்

1.சர்வதேச கோர்ட்டு நீதிபதியாக இந்திய நீதிபதி தல்வீர் பண்டாரி மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.15 நீதிபதி பணியிடங்களை கொண்ட இந்த கோர்ட்டில் கடைசி ஒரு இடத்துக்கு தற்போது இவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.


விளையாட்டு

1.இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையிலான கொல்கத்தாவில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டி ஈடன் கார்டன் மைதானத்தில் டிராவில் முடிவடைந்தது.இந்திய வீரர் புவனேஸ்வர் குமார் ஆட்டநாயகன் விருது பெற்றார்.
2.கொல்கத்தா ஈடன் கார்டனில் சதம் அடித்ததன் மூலம் சர்வதேச போட்டிகளில் 50 சதங்கள் அடித்து விராட் கோலி சாதனைப் படைத்துள்ளார்.இந்திய வீரர் சச்சின் தெண்டுல்கர் 100 சதங்கள் அடித்து முதல் இடத்தில் உள்ளார். பாண்டிங் 71 சதங்களுடன் 2-வது இடத்திலும், சங்ககரா 63 சதங்களுடன் 3-வது இடத்திலும், கல்லீஸ் 62 சதங்களுடன் 4-வது இடத்திலும், அம்லா 54 சதங்களுடன் 5-வது இடத்திலும், ஜெயவர்தனே 54 சதங்களுடன் 6-வது இடத்திலும், லாரா 53 சதங்களுடன் 7-வது இடத்திலும் உள்ளனர். விராட் கோலி 50 சதங்களுடன் 8-வது இடத்தில் உள்ளார்.
3.கொல்கத்தாவில் நடைபெற்ற இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் சத்தீஸ்வர் புஜாரா ஐந்து நாட்களும் பேட்டிங் செய்ததால், 3-வது இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.இதற்கு முன்பு 1960-ம் ஆண்டு ஜெய்சிம்காவும் (ஆஸ்திரேலியாவுக்கு எதிராக, கொல்கத்தா), 1984-ம் ஆண்டு ரவி சாஸ்திரியும் (இங்கிலாந்துக்கு எதிராக, கொல்கத்தா) 5 நாட்களும் ஆடி இந்த சாதனையை படைத்தனர்.


இன்றைய தினம்

1.இன்று உலகத் தொலைக்காட்சி தினம் (World Television Day).
உலக நாடுகள் அமைதி, பாதுகாப்பு, பொருளாதாரம், சமூக மாற்றங்கள் மற்றும் தமது கலை, கலாச்சாரம் போன்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைத் தமக்கிடையே பரிமாறிக் கொள்வதற்கு இத்தினம் சிறப்பானதாக கருதப்படுகிறது. ஐ.நா. சபையானது 1996ஆம் ஆண்டு டிசம்பர் 17 அன்று நவம்பர் 21 ஐ உலகத் தொலைக்காட்சி தினமாக அறிவித்தது.

 

–தென்னகம்.காம் செய்தி குழு