இந்தியா

1.துணை ஜனாதிபதி ஹைதராபாத்தில் 10th Urban Mobility India conference ஐ துவக்கி வைத்துள்ளார்.
2.பத்தாண்டுகளில் முதல் முறையாக பேங்க் ஆப் இங்கிலாந்து (இங்கிலாந்தின் மத்திய வங்கி) வட்டி விகிதத்தை உயர்த்தி இருக்கிறது. அடிப்படை வட்டி விகிதம் 0.25 சதவீதத்தில் இருந்து 0.50 சதவீதமாக உயர்த்தப்பட்டிருக்கிறது.
3.புற்றுநோய் சிகிச்சைக்கான பிரத்யேக `ஸ்டார் கேன்சர் கேர் கோல்டு’ பாலிசியை ஸ்டார் ஹெல்த் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
4.2016ம் ஆண்டு நவம்பர் 08ல் பண மதிப்பிழப்பு செய்யப்பட்டதை நினைவு கூறும் வகையில் இந்த ஆண்டு நவம்பர் 08 ஐ கருப்பு பணத்திற்கு எதிரான நாளாக கடைபிடிக்கப்படும் என நிதியமைச்சர் அருண் ஜேட்லி அறிவித்துள்ளார்.
5.117 ஆண்டுகளுக்கு முன்னர் 1900ம் ஆண்டு டாக்டர் அம்பேத்கர் பள்ளியில் சேர்க்கப்பட்டதை நினைவுகூறும் வகையில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 7ம் தேதியை “மாணவர் தினம்” ஆக கடைப்பிடிக்கும்படி மகாராஷ்டிரா மாநில கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
6.ஈரோடு மாவட்டத்தில் அமைந்துள்ள சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில், காட்டுக்குள்ளேயே சென்று விலங்குகளைப் பார்க்கும் வகையில் வண்ணப் பூரணி என்ற புதிய சுற்றுலாத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில், புலிகள் காப்பகத்தைச் சுற்றிப் பார்க்கலாம்.


உலகம்

1.ஆசியாவின் மிகப்பெரிய தூர்வாரும் கப்பலை சீனா உருவாக்கியுள்ளது. இதற்கு டியான்குன் ஹாவோ என பெயரிடப்பட்டுள்ளது.