இந்தியா

1.உத்தரபிரதேசத்தில் 10, 12-ம் வகுப்பு மாணவர்கள் பொதுத் தேர்வு எழுதுவதற்காக தேர்வு மையங்களுக்கு கட்டாயம் தங்களுடன் ஆதார் அட்டையை உடன் எடுத்து வர உத்தரவிடப்பட்டுள்ளது.
2.கேரளாவில் தேவசம்போர்டின் புதிய தலைவராக முன்னாள் எம்.எல்.ஏ. பத்மகுமாரும், உறுப்பினராக இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தலைவர் சங்கரதாசும் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.
3.ராஜஸ்தானின் முதல் திருநங்கை பாதுகாப்பு படை கான்ஸ்டபிளாக கங்கா குமாரி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.இந்தியாவில் அரசு பணியில் நியமனம் செய்யப்பட்ட 3 வது திருநங்கை இவர் என்பது குறிப்பிடத்தக்கது.


உலகம்

1.இந்தியாவிற்கான புதிய அமெரிக்க தூதராக கென்னத் ஜஸ்டெரின் பதவியேற்றுக்கொண்டுள்ளார் .


இன்றைய தினம்

1.இன்று உலக குறைப்பிரசவ குழந்தை தினம் (World Prematurity Day).
உலக முழுவதும் ஆண்டிற்கு 15 மில்லியன் குறைப்பிரசவக் குழந்தைகள் பிறக்கின்றன. அதாவது 10 இல் 1 குழந்தை குறைப்பிரசவத்தில் பிறக்கிறது. ஒரு குழந்தை 37 வாரத்திற்கு குறைவாகப் பிறந்தால் அது குறைப்பிரசவம். குறைப்பிரசவத்தில் பிறந்த குழந்தைகளுக்கு எதிர்ப்புச்சக்தி குறைவாக இருப்பதால் பல்வேறு நோய்கள் தொற்றிக்கொள்ளும். இது சார்ந்த விழிப்புணர்வு ஏற்படுத்த இத்தினம் கொண்டாடப்படுகிறது.
2.இன்று சர்வதேச மாணவர்கள் தினம்.
செக்கோஸ்லோவோக்கியாவின் தலைநகர் பிராக்கில் சார்லஸ் பல்கலைக்கழகத்தில் மாணவர் போராட்டம் 1939ஆம் ஆண்டு நவம்பர் 17இல் நடந்தது. நாஜிப் படையினரால் போராட்டம் நசுக்கப்பட்டதோடு 10 மாணவர்கள் தூக்கிலிடப்பட்டனர். மாணவர்களின் எழுச்சியை சர்வதேச அளவில் நினைவூட்ட ஆண்டுதோறும் நவம்பர் 17 அன்று சர்வதேச மாணவர் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.

 

–தென்னகம்.காம் செய்தி குழு