இந்தியா

1.முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் வாழ்க்கை வரலாறு ‘ தி ஆக்ஸிடென்டல் பிரைம் மினிஸ்டர் ’ என்ற பெயரில் திரைப்படமாக உருவாக இருக்கிறது.மன்மோகன்சிங் தற்செயலாக பிரதமர் ஆனதை குறிப்பிடும் வகையில் இந்த தலைப்பை தேர்ந்து எடுத்து இருக்கிறார்கள்.மன்மோகன்சிங் வேடத்தில் அனுபம்கெர் நடிக்கிறார். சுனில்போஹ்ரா தயாரிக்கும் இந்த படத்தை விஜய் ரத்னாகர் குட்டே இயக்குகிறார்.
2.மும்பையின் புறநகர் ரயில் நிலையங்களான சர்ச் கேட் மற்றும் விரார் புறநகர் இடையே பயணிக்கும் பெண் பயணிகளின் பாதுகாப்பிற்காக ரயில்வே மேற்கு மண்டல காவல்துறையினர் Eyewatch Railways என்ற செயலியை அறிமுகம் செய்துள்ளனர்.
3.டாடா இலக்கிய வாழ்நாள் சாதனையாளர் விருது கர்நாடகவைச் சேர்ந்த கிரிஷ் கர்னாட் பெற்றுள்ளார்.
4.பிரதமரின் பொருளாதார ஆலோசனை குழுவின் பகுதி நேர உறுப்பினராக ஷமிகா ரவி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
5.நவம்பர் 19 – 26 வரை குவஹாத்தியில் நடைபெறவுள்ள சர்வதேச குத்துச்சண்டை சம்மேளனம் சார்பிலான பெண்கள் இளையோர் உலக சாம்பியன்ஷிப் ( AIBA Women’s Youth World Championships 2017 ) போட்டியின் நல்லெண்ண தூதராக மேரி கோம் நியமிக்கப்பட்டுள்ளார்.


உலகம்

1.பிரிட்டனின் புதிய பாதுகாப்புத்துறை மந்திரியாக கவின் வில்லியம்சன் நியமிக்கப்பட்டுள்ளார்.இதற்கு முன் பாதுகாப்புத்துறை அமைச்சராக இருந்த மைக்கேல் ஃபாலன், பாலியல் குற்றச்சாட்டு காரணமாக பதவி விலகியுள்ளார்.
2.Ramayan Circuit and Mithila – Awadh Relations என்ற சர்வதேச மாநாடு நேபாளத்தில் ஜானக்பூரில் நடைபெற்றுள்ளது.
3.கஜகஸ்தான் நாடு 2025 முதல் தங்களது நாட்டின் பெயர் லத்தீன் அமெரிக்க உச்சரிப்பின் படி Qazaqstan என பெயர் மாற்றம் செய்யப்படும் என அறிவித்துள்ளது.