இந்தியா

1.மும்பையில் உள்ள Gamdevi Police Station நூற்றாண்டு விழா கண்டுள்ளது.
2.புனேயில் செயல்படும் The Film and Television Institute of Indiaவின் புதிய தலைவராக ஹிந்தி நடிகர் அனுபம் கேர் நியமிக்கப்பட்டுள்ளார்.
3.பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் நிர்வாகத்தை மேம்படுத்துவதற்காக, பங்குச்சந்தை ஒழுங்குமுறை ஆணையம் (செபி) சார்பில் அமைக்கப்பட்ட உதய் கோடக் ( கோடக் மஹிந்திரா வங்கியின் தலைவர் ) தலைமையிலான குழு தன்னுடைய பரிந்துரைகளை சமர்ப்பித்துள்ளது.
4.உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் சரயு நதிக் கரையில் 100 மீட்டர் (328 அடி) உயரம் உள்ள பிரம்மாண்டமான ராமர் சிலை அமைக்க மாநில அரசின் சுற்றுலாத் துறை முடிவு செய்துள்ளது.
5.கர்நாடகாவில் புகழ்பெற்ற ஞானபீட விருது கன்னட எழுத்தாளர் ஷிவராம் காரந்த் பெயரிலான விருது, நடிகர் பிரகாஷ் ராஜுக்கு வழங்கப்பட்டுள்ளது.
6.இந்தியா – ஐரோப்பிய யூனியன் 14ஆவது உச்சி மாநாடு புதுடெல்லியில் அக்டோபர் 06ல் நடைபெற்றுள்ளது.
பிரதமர் மோடி , ஐரோப்பிய கவுன்சில் தலைவர் டொனால்டு பிரான்சிஸ்ஜக் டஸ்க், ஐரோப்பிய கமிஷன் தலைவர் ஜுன் கிளாடி ஜங்கர் ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.


உலகம்

1.சீனாவின் ஜியாமென் நகர சுரங்க ரயில் பெட்டிகள் பிரிக்ஸ் நாடுகளின் சிறப்புகளை கருப்பொருளாக ( Theme ) கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. ரேசில் — கால்பந்து, கால்பந்து மைதானம் மற்றும் கால்பந்து வீரர்கள்,ரஷ்யா – புகழ்பெற்ற பாலே நடன பொம்மைகள் ( ballet and matryoshka dolls.),இந்தியா. – யானைகள் மற்றும் யோகா.சீனா – சீனப் பெருஞ்சுவர் மற்றும் தியானமென் சதுக்கம்,தென்னாப்பிரிக்கா – வைரங்கள்.
2.தீவிரவாதத்துக்கு உதவுகிறது என்று ஆப்பிரிக்க நாடான சூடான் மீது 20 ஆண்டுகள் வர்த்தக தடையை அந்நாட்டின் மீது அமெரிக்கா விதித்திருந்தது.தற்போது சூடான் மீதான தடை நீக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது.


விளையாட்டு

1.உலகக்கோப்பைக் கால்பந்து தொடருக்குத் தகுதி பெற்ற சிறிய நாடு என்ற பெருமையைத் தட்டிச் சென்றது ஐஸ்லாந்து.ஐஸ்லாந்து மக்கள் தொகை சுமார் 3,50,000.இதற்கு முன்னதாக 2006 உலகக்கோப்பைக் கால்பந்துக்குத் தகுதி பெற்ற சிறிய நாடு டிரினிடாட் டொபாகோவாகும் இந்த நாட்டின் மக்கள் தொகை சுமார் 13 லட்சம்.தற்போது அதை விட சிறிய நாடான ஐஸ்லாந்து உலக கோப்பை போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.


இன்றைய தினம்

1.1954 – சோ ஓயு மலையின் உச்சி முதன் முறையாக எட்டப்பட்டது.

 

–தென்னகம்.காம் செய்தி குழு