இந்தியா

1.கோவா தலைநகர் பனாஜியில் மத்திய அரசின் சார்பில் 48-வது சர்வதேச திரைப்பட விழா இன்று தொடங்கி வரும் 28-ம் தேதி வரை நடைபெறவுள்ளது.
2.பெங்களூருவில், ஒரே மோட்டார் சைக்கிளில் 58 ராணுவ வீரர்கள் பயணித்து உலக சாதனை படைத்தனர். இந்த சாதனை ‘கின்னஸ்’ புத்தகத்தில் இடம்பெறுகிறது.பெங்களூருவில் உள்ள இந்திய ராணுவத்தின் ஏ.எஸ்.சி. பயிற்சி மையத்தில் உள்ள ‘டர்னடோஸ்’ குழுவில் இருக்கும் ராணுவ வீரர்கள் இந்த சாதனையில் ஈடுப்பட்டனர்.


உலகம்

1.ஜிம்பாப்வே அதிபர் ராபர்ட் முகாபேவை ஆளும்கட்சி தலைவர் பதவியில் இருந்து நீக்கியும் கட்சியின் புதிய தலைவராக முன்னாள் துணை அதிபர் எம்மர்சன் நாங்காக்வா நியமித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
2.அமெரிக்காவில் சீட்டில் நகர துணை மேயராக சென்னையை சேர்ந்த பெண் ஷெபாலி ரங்கநாதன் (38). நியமிக்கப்பட்டுள்ளார்.


விளையாட்டு

1.லண்டனில் நடைபெற்று வரும் ஏ.டி.பி. உலக டூர் எனப்படும் உலக டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியின் இரட்டையர் இறுதிப் போட்டியில் பின்லாந்து வீரர் ஹென்ரி கான்டினன் மற்றும் ஆஸ்திரேலிய வீரர் ஜான் பியர்ஸ் ஜோடி, போலந்து வீரர் லுகாஸ் குபாட் மற்றும் பிரேசில் வீரர் மர்செலோ மலோ ஜோடியை 6-4, 6-2 என்ற கணக்கில் தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.


இன்றைய தினம்

1.இன்று ஆப்பிரிக்க தொழில்மயமாக்கல் தினம் (Africa Industrialization Day).
ஆப்பிரிக்கா இயற்கை வளம் நிறைந்த நாடு. கடுமையாக உழைக்கும் தொழிலாளர்கள் நிறைந்த நாடு. ஆனால் தொழில் வளர்ச்சி ஏற்படாததால் பஞ்சம், பசி, பட்டினி போன்றவை நிரந்தரமானதாக உள்ளது. வறுமை, வேலையில்லாத் திண்டாட்டம், வன்முறை, உணவுப் பஞ்சம் போன்ற மிகப் பெரிய சவால்கள் உள்ளன. ஆகவே ஆப்பிரிக்காவின்மீது ஐ.நா. தனிக்கவனம் செலுத்தி நவம்பர் 20ஐ ஆப்பிரிக்க தொழில்மயமாக்கல் தினமாக அறிவித்தது.
2.இன்று சர்வதேசக் குழந்தைகள் தினம் (Universal Children’s Day).
ஐ.நா. பொதுச்சபை குழந்தைகளின் நலனையும், உரிமைகளையும் பாதுகாக்கும் வகையில் 1954ஆம் ஆண்டில் குழந்தை உரிமைகள் சட்டத்தைக் கொண்டுவந்தது. வறுமை, எட்ய்ஸ் போக்கவும், குழந்தைகளுக்கு வராமல் தடுக்கவும், யுனிசெஃப் முயன்று வருகிறது. குழந்தைகளின் நலனைப் பாதுகாக்க ஐ.நா. சபை 1954ஆம் ஆண்டில் நவம்பர் 20ஐ சர்வதேசக் குழந்தைகள் தினமாக அறிவித்தது.

 

 

–தென்னகம்.காம் செய்தி குழு