இந்தியா

1.அதிகபட்ச தொலைதொடர்பு பாதுகாப்பு காரணங்களுக்காக மூத்த அதிகாரிகளுக்கு ரிலையன்ஸ் சிம் கார்டுகளுடன் 500 கூகிள் பிக்ஸல் போன்களை மத்திய அரசு வழங்கியுள்ளது.
2.இந்திய கடலோரக் காவல்படையில் 30 ஆண்டுகள் சேவையாற்றிய வருணா கப்பல், இந்தியா மற்றும் இலங்கையின் கடலோர காவல் படைகள் இடையே ஒத்துழைப்பை வலுப்படுத்தும் விதமாக இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளது.இதற்கு முன்பு இலங்கைக்கு இந்தியா 2 கப்பலை வழங்கியுள்ளது. கடந்த 2006 ஏப்ரலில் வரகா என்ற கப்பலையும் 2008 ஆகஸ்ட்டில் விக்ரஹா என்ற கப்பலையும் வழங்கியது. தற்போது வருணா வழங்கப்பட்டுள்ளது.
3.“லங்கேஷ் பத்ரிகே” என்ற பத்திரிகையின் முதன்மை ஆசிரியரான கவுரி லங்கேஷ் பெங்களூருவில் சுட்டு கொல்லப்பட்டார்.பல்வேறு பிரபல ஆங்கில நாளேடுகளில் பணியாற்றிய இவர் வகுப்புவாதம், மதவாதத்துக்கு எதிராக செயல்பட்டவர். தொடர்ந்து பாஜகவுக்கு எதிராகவும், இந்துத்துவாவை எதிர்த்தும் பல்வேறு கட்டுரைகளை எழுதி வந்தவர்.


வர்த்தகம்

1.இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் தலைவர் பொறுப்பில் இருந்து சேஷசாயி கடந்த வாரம் ராஜினாமா செய்துவிட்டதால் புதிய தலைவராக நந்தன் நிலகேணி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி பொறுப்பில் இருந்து விஷால் சிக்கா ராஜினாமா செய்ததை அடுத்து யூபி பிரவீண் ராவ், தலைமைச் செயல் அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.


உலகம்

1.சிங்கப்பூரின் இடைக்கால அதிபராக ஜோசப் பிள்ளை ( தமிழர் ) பதவியேற்றுள்ளார். சிங்கப்பூர் அரசின் மூத்த அரசு அதிகாரியான ஜோசப் பிள்ளை, அதிபர் ஆலோசனை கவுன்சில் தலைவராக உள்ளார். அந்த நாட்டு அதிபர் வெளிநாடு செல்லும் போதெல்லாம் பொறுப்பு அதிபர் பொறுப்பை அவர் ஏற்பது வழக்கம். அந்த வரிசையில் தற்போது அவர் தற்காலிக அதிபராக பதவியேற்றுள்ளார். இதுவரை 60க்கும் மேற்பட்ட முறை அவர் அதிபர் பொறுப்பை ஏற்றுள்ளார்.
2.சர்வதேச ஊழல் தடுப்பு அமைப்பான ‘டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல்’ சமீபத்தில் நடத்திய ஆய்வின் அடிப்படையில், ஆசிய பிராந்தியத்தில் ஊழல் மிகுந்த நாடுகளை போர்ப்ஸ் இதழ் பட்டியலிட்டுள்ளது. இதில் இந்தியா முதலிடத்தைப் பிடித்துள்ளது.அடுத்தபடியாக 65 சதவீதத்துடன் வியட்நாம் 2-ம் இடம் பிடித்துள்ளது. தாய்லாந்து, பாகிஸ்தான், மியான்மர் ஆகியவை முறையே அடுத்தடுத்த இடங்களைப் பிடித்த முதல் 5 நாடுகள் ஆகும்.டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் அமைப்பு, சர்வதேச அளவில் ஊழல் மிகுந்த 168 நாடுகள் பட்டியலை கடந்த ஆண்டு வெளியிட்டிருந்தது. இதில் இந்தியா 76-வது இடத்தில் இருந்தது.
3.தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இந்தியா மற்றும் கனடா இணைந்து தபால்தலை வெளியிட ஒப்பந்தம் செய்துள்ளன.
4.கொலம்பியாவில் பார்க் ( FARC ) என்ற தீவிரவாத அமைப்பு 50 ஆண்டுகளுக்கும் மேலாக ஆயுத போராட்டத்தில் ஈடுபட்டு வந்தது. அந்த நாட்டு அரசுக்கும் பார்க் அமைப்புக்கும் இடையே ஓராண்டுக்கு முன்பு அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது.தற்போது பார்க் தீவிரவாத அமைப்பு கடந்த 1-ம் தேதி ” சாமானியர்களுக்கான மாற்று புரட்சிகர படை ” என்ற பெயரில் அரசியல் கட்சியாக உருவெடுத்தது. கட்சியின் புதிய தலைவராக இவான் மார்கியூஸ் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.


இன்றைய தினம்

1.1998 – கூகிள் ஆரம்பிக்கப்பட்டது.

 

– தென்னகம்.காம் செய்தி குழு