தமிழகம்

1.2017-ம் ஆண்டுக்கான தூய்மை புரஸ்கார் விருது , தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு வழங்கப்பட்டுள்ளது.


இந்தியா

1.ஹைதராபாத்தை சேர்ந்த National Institute of Nutrition , இந்தியாவின் முதல் ஊட்டச்சத்து அட்லஸை தயாரித்து வெளியிட்டுள்ளது.
2.My India Wi-Fi India Summit 2017 புதுடெல்லியில் நடைபெற்றுள்ளது.Best Make In India Wi-Fi Company விருது DIGISOL Systems Ltd பெற்றுள்ளது.
3.இந்திய வேதியியல் ஆராய்ச்சி சமூகம் சார்பில் வேதியியல் துறையில் பல்வேறு நிலைகளில் சிறந்து விளங்குபவர்களை ஊக்குவிக்கும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் விருது வழங்கி வருகிறது.அந்தவகையில் இந்த ஆண்டுக்கான சி.என்.ஆர். ராவ் தேசிய விருதுக்கு சென்னை ஐ.ஐ.டி. கல்வி நிறுவனத்தின் வேதியியல் துறை பேராசிரியர் சங்கரநாராயணன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.


உலகம்

1.ஐக்கிய அரபு எமிரேட்டின் சார்ஜாவில் இந்திய வெளியுறவுத்துறை சார்பில் 2வது இந்திய தொழிலாளர்கள் வள மையம் துவங்கப்பட்டுள்ளது.ஏற்கெனவே துபாயில் துவக்கப்பட்டுள்ளது.
2.ஒலிம்பிக் நெறிமுறை கமிட்டி தலைவராக ஐ.நா.சபை முன்னாள் பொதுச்செயலாளர் பான் கீ மூன் தேர்வு பெற்றுள்ளார்.
3.ஐ.நா. சபையின் தலைவர் பதவியில் இருந்து ஓய்வு பெறும் பீட்டர் தாம்சனை , கடல்களுக்கான முதல் ஐ.நா. தூதராக ஐ.நா. பொதுச்செயலாளர் நியமித்துள்ளார்.
4.மியான்மரில் இருந்து அகதிகளாக இடம்பெயர்ந்து பங்களாதேஷில் வசிக்கும் ரோஹிங்கியா இன மக்களுக்கு, இந்திய வெளியுறவுத்துறை சார்பில் அரிசி, பருப்பு, சீனி, டீ தூள், உப்பு, பிஸ்கட் , கொசு வலை உள்ளிட்ட பொருட்கள் விமானப்படை விமானம் மூலம் சிட்டகாங் முகாமிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.இந்த மனிதாபிமான நடவடிக்கைகளுக்கு Operation Insaniyat என பெயரிடப்பட்டுள்ளது.


விளையாட்டு

1.செக் குடியரசில் நடைபெற்ற Birell Prague Grand Prix 10 கிலோமீட்டர் ஓட்ட போட்டியில், கென்யாவைச் சேர்ந்த Joyciline Jepkosgei 29.43 நிமிடங்களில் கடந்து சாதனை படைத்துள்ளார்.
2.Commonwealth (Youth, Junior and Senior) Weightlifting Championships போட்டிகள் 2019ல் இந்தியாவில் நடைபெறவுள்ளது.


இன்றைய தினம்

1.இன்று மைக்கேல் பாரடே பிறந்த தினம் (Michael Faraday Birth Day).
மின்சாரம் நமது அன்றாட வாழ்க்கையில் ஒரு அங்கமாக மாறிவிட்டது. மருத்துவத் துறைகளிலும் மின்சாரம் பயன்படுகிறது. மின்சாரம் இல்லை என்றால் தொலைகாட்சி, ரயில், மின் விசிறி, கணினி, தொழிற்சாலைகள் என பலவும் இயங்காது. மின்சாரம் உற்பத்தி செய்யும் முறையை முதன்முதலில் மைக்கேல் பாரடே கண்டுபிடித்தார். இவர் 1791ஆம் ஆண்டு செப்டம்பர் 22 அன்று இங்கிலாந்து நாட்டில் பிறந்தார்.
2.இன்று உலக கார் இல்லாத நாள் (World Car Free Day).
நகரங்களில் போக்குவரத்து நெரிசல் காரணமாக நடந்து செல்வதே பெரிய பிரச்சினையாக மாறி வருகிறது. நடந்து செல்லும் தூரத்திற்குக்கூட காரை எடுத்துச் செல்கின்றனர். ஆகவே மிக அருகில் உள்ள இடங்களுக்கு சைக்கிள் அல்லது நடந்து செல்ல வேண்டும். காரை செப்டம்பர் 22 அன்று ஒரு நாள் பயன்படுத்தாமல் இருக்க வாஷிங்டன் போஸ்ட் இத்தினத்தை 1995இல் அறிவித்தது.

 

– தென்னகம்.காம் செய்தி குழு