இந்தியா

1.நவம்பர் 08 – 11 வரை திருவனந்தபுரத்தில் சர்வதேச கவிதை திருவிழா #கிருத்யா 2017 நடைபெற்றது.இனவாதம் மற்றும் அன்னியர் மீதான அச்சத்திற்கு எதிரான கவிதை என்ற தலைப்பில் இந்த கவிதை திருவிழா நடைபெற்றது.
2.இந்தியாவுக்கான அமெரிக்க தூதராக கென்னத் ஜஸ்டரை நியமிக்க அமெரிக்க செனட் ஒப்புதல் வழங்கியுள்ளது.
3.பாகிஸ்தானுக்கான இந்திய தூதராக அஜய் பிஸாரியோ நியமிக்கப்பட்டுள்ளார்.
4.பூடான் மன்னர் ஜிக்மே கேஷர் நம்கேல் இந்தியாவுக்கு வந்துள்ளார்.


உலகம்

1.அமெரிக்க மத்திய வங்கியின் புதிய தலைவராக ஜெரோம் பவெல் நியமிக்கப்பட்டுள்ளார்.
2.அக்டோபர் 22ல் ஜப்பான் நாடாளுமன்றத்திற்கு நடைபெற்ற தேர்தலில், மொத்தமுள்ள 465 இடங்களில் 313 இடங்களை வென்ற ஆளும் லிபரல் ஜனநாயக கட்சியின் தலைவராக தேர்வு செய்யப்பட்ட ஷின்ஸோ அபே , மீண்டும் ஜப்பானின் பிரதமராக பதவியேற்க உள்ளார்.
3.அபுதாபியில் அக்டோபர் 30 – நவம்பர் 01 வரை International Ministerial Conference on Nuclear Power in the 21st Century என்ற ஐ.நா.அணுசக்தி மாநாடு நடைபெற்றுள்ளது.இந்த மாநாட்டை ஈரான் புறக்கணித்துள்ளது.


விளையாட்டு

1.மலேசியாவில் நடைபெற்ற சுல்தான் ஜோஹர் ஜூனியர் கோப்பை ஹாக்கி போட்டியில் இந்திய அணி மூன்றாவது இடம் பெற்றுள்ளது.ஆஸ்திரேலியா கோப்பையை வென்றுள்ளது. பிரிட்டன் இரண்டாவது இடம் பெற்றுள்ளது.