இந்தியா

1.160 கி.மீ வேகத்தில் செல்லும் நாட்டின் அதிவிரைவு ரெயிலான காதிமான் டெல்லி – ஆக்ரா இடையே இயக்கப்பட்ட நிலையில், வேகத்தை குறைத்து ஜான்சி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.ஆக்ரா வரை மட்டுமே 160 கி.மீ வேகத்தில் ரெயில் இயங்கும் எனவும், அதன் பின்னர் 130 கி.மீ வேகத்தில் ஜான்சி வரை இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
2.மகா சிவராத்திரி தினத்தையொட்டி ஒடிசா பூரி கடற்கரையில் மணல் சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக் 108 சிவலிங்கங்களை வடிவமைத்துள்ளார்.


உலகம்

1.தென் ஆப்பிரிக்காவில் ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கிய அதிபர் ஜேக்கப் ஜூமாவுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவர முடிவெடுக்கப்பட்டதையடுத்து அவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.இதையடுத்து துணைஜனாதிபதி சிரில் ராமபோசா இன்றோ, நாளையோ அதிபராக பதவி ஏற்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
2.நேபாள பாராளுமன்ற மேல்சபை தேர்தலில் வெற்றி பெற்ற இடதுசாரி கட்சிகளின் கூட்டணியை சேர்ந்த சர்மா ஒலி அடுத்த பிரதமராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
3.கேன்சர் கட்டிகளுக்கு செல்லும் ரத்தத்தை தடுத்து கேன்சல் செல்களை அழிக்கும் புதிய சிகிச்சை முறையை கண்டுபிடித்து அமெரிக்காவைச் சேர்ந்த அரிசோனா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் சாதனைப் படைத்துள்ளனர்.
4.டென்மார்க் அரசி மார்கரெட்டின் கணவரான இளவரசர் ஹென்றிக் உடல் நலக்குறைவால் மரணமடைந்தார்.


இன்றைய தினம்

1.இன்று கலிலியோ கலிலி பிறந்த தினம் (Galileo Galilei Birth Anniversary Day).
கலிலியோ 1564ஆம் ஆண்டு பிப்ரவரி 15 அன்று இத்தாலி நாட்டில் பிறந்தார். இவரை நவீன வானவியல் ஆய்வுகளின் தந்தை, நவீன இயற்பியலின் தந்தை மற்றும் நவீன அறிவியலின் தந்தை எனவும் அழைக்கின்றனர். தொலைநோக்கி மூலம் வியாழன் கிரகத்திற்கு 4 நிலாக்கள், சனிக்கிரகத்திற்கு வளையம், சூரியனில் கரும்புள்ளிகள் இருப்பதையும் கண்டுபிடித்தார்.

 

–தென்னகம்.காம் செய்தி குழு