இந்தியா

1.Maharashtra Mission 1 Million — FIFA – U 17 உலக கோப்பை கால்பந்து போட்டி இந்தியாவில் நடைபெறுவதை முன்னிட்டு, மகாராஷ்டிரா முதல்வர் பத்து லட்சம் ( 1 மில்லியன் ) மாணவர்களுக்கு கால்பந்து ஆர்வத்தை ஊக்குவிக்க Maharashtra Mission 1 Million திட்டத்தை துவக்கி வைத்துள்ளார்.
2.Uniformed Women in Prison Administration மாநாடு புதுடெல்லியில் நடைபெற்றது.
3.First Rashtriya Ayurveda Yuva Mahostsava – 2017 ( 1st RAYM ) செப்டம்பர் 14 – 16 வரை ஜெய்ப்பூரில் நடைபெற்றுள்ளது.
4.உலக பொருளாதார அமைப்பு ( WEF ) வெளியிட்டுள்ள உலகளாவிய மனித மூலதனக் குறியீடு – 2017ல் இந்தியா 103 வது இடம் பெற்றுள்ளது. ( 2016ல் 105 வது இடம் )நார்வே முதலிடத்தில் உள்ளது. பின்லாந்து 2வது இடத்தில் உள்ளது.பிரிக்ஸ் நாடுகளான ரஷ்யா – 16, சீனா – 34 , பிரேசில் – 77 , தென்னாப்பிரிக்கா – 87 வது இடங்களில் உள்ளன.தெற்காசிய நாடுகளான இலங்கை – 70, பங்களாதேஷ் -111, பாகிஸ்தான் -125 இடத்தை பிடித்துள்ளன.
5.புதுமையான நகரங்களைப் பற்றி ஆய்வு செய்யும் 2thinknow என்ற ஆராய்ச்சி நிறுவனம் நடத்திய ஆய்வு முடிவுகளில் , உலகின் முதல் 25 தொழில்நுட்ப நகரங்கள் பட்டியலில் பெங்களூரு 19வது இடம் பெற்றுள்ளது.
( கடந்த ஆண்டில் 49வது இடம் பெற்றிருந்தது ).சான்பிரான்சிஸ்கோ முதல் இடத்தையும்,நியூயார்க் இரண்டாவது இடத்தையும்,லண்டன் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளன.


உலகம்

1.சீனா உருவாக்கியுள்ள முதல் ஆளில்லா தாக்குதல் ஹெலிகாப்டர் AV500W ஆகும்.
2.சுவீடன் மற்றும் நாட்டோ அமைப்பு நாடுகள் இணைந்து Aurora என்ற ராணுவ பயிற்சியில், பால்டிக் தீவு பகுதியில் ஈடுபட்டுள்ளன.
3.அமெரிக்கா மற்றும் ஜப்பான் இராணுவங்கள் இணைந்து Orient Shield – 2017 என்ற பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
4.IUCN எனப்படும் பன்னாட்டு இயற்கை பாதுகாப்புச் சங்கம், பனிச்சிறுத்தைகளை ‘அழிவு நிலை இனங்கள்’ (Endangered Species ) எனும் வகைப்பாட்டில் இருந்து, ‘மறையத்தகு உயிரினங்கள்’ (Vulnerable ) எனும் வகைப்பாட்டிற்கு நிலை உயர்த்தியுள்ளது.
5.சமீபத்தில் விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் WASP-12b எனும் வெளிக்கோளானது (exoplanet) ஒளியே இல்லாத கார் இருள் (pitch black) போன்ற நிலையில் இருப்பதாகக் கண்டறிந்துள்ளனர். இதனை ஹப்பிள் தொலைநோக்கி வழியே விஞ்ஞானிகள் படம்பிடித்துள்ளனர்.இந்த புதிய கண்டுபிடிப்பு பூமியிலிருந்து 1400 ஒளி ஆண்டுகள் தொலைவிலுள்ள இந்த வெளிக்கோளின் வளிமண்டல (atmospheric Composition) அமைப்பை அறிய உதவும்.ஆனாலும் நிபுணர்கள் இத்தகு புதிய வகைப்பாடு பனிச்சிறுத்தைகள் பாதுகாப்பாக உள்ளன என பொருளில்லை என்று எச்சரித்துள்ளனர்.


இன்றைய தினம்

1.1950 – இந்தோனீசியா ஐநாவில் இணைந்தது.

 

– தென்னகம்.காம் செய்தி குழு