இந்தியா

1.மக்களை கவரும் வகையிலும், சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையிலும் இலவச சைக்கிள் திட்டம் ஈக்காட்டுத்தாங்கல், நேரு பூங்கா, திருமங்கலம், அண்ணாநகர் வட பழனி, ஷெனாய்நகர் மெட்ரோ ரயில் நிலையங்களில் தொடங்கப்பட்டுள்ளது.
2.தமிழக அனுபவம் குறித்து முன்னாள் கவர்னர் வித்யாசாகர் ராவ் எழுதியுள்ள புத்தகம் ” அந்த நிகழ்வுகள் நடந்த நாட்கள் ” ஐ, துணை ஜனாதிபதி வெளியிட்டுள்ளார்.
3.நேபாளத்தின் லிவாங் நகரத்தில் இருந்து டெல்லிக்கு வாரம் ஒரு முறை செல்லும் பேருந்து போக்குவரத்து சேவையானது அக்டோபர் 16 முதல் தொடங்கப்பட்டு உள்ளது.
4.சென்னையில் நடைபெறும் இந்தியா சர்வதேச அறிவியல் விழாவை மத்திய அறிவியல் துறை அமைச்சர் ஹர்ஷா வரதன் துவக்கி வைத்துள்ளார்.
5.தமிழக அரசின் நிதி மேலாண்மை பணிகளை எளிமைப்படுத்தவும், அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான நிதி சேவைகளை டிஜிட்டல் மயமாக்க, தமிழக அரசு விப்ரோ நிறுவனத்துடன் இணைந்து ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மை திட்டத்தை செயல்படுத்த உள்ளது.


உலகம்

1.ஐ.நா. தடையை மீறி வடகொரியாவுக்கு பொருட்களை ஏற்றிச் சென்ற பெட்ரெல் 8, ஹோ பேன் 6, டாங் சன் 2, ஜி சைன் ( Petrel 8, Hao Fan 6, Tong San 2 and Jie Shun )ஆகிய 4 கப்பல்களை எந்தவொரு நாடும் தங்களது துறைமுகங்களில் நுழைய அனுமதிக்கக்கூடாது என்று ஐ.நா. சபை உத்தரவிட்டுள்ளது.
2.சீனாவிற்கு சொந்தமான டியாங்கோங்-1 என்ற விண்வெளி ஆராய்ச்சி நிலையம் பூமியின் மீது அடுத்த மாத இறுதிக்குள் எப்போது வேண்டுமானாலும் மோதலாம் என அந்நாட்டு விண்வெளித் துறை தெரிவித்துள்ளது.


விளையாட்டு

1.ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் இறுதிப் போட்டியில் சுவிஸ் நட்சத்திரம் ரோஜர் பெடரர் , ரபேல் நடாலை வீழ்த்தி பட்டம் வென்றுள்ளார்.இந்த வெற்றி மூலம் இவான் லெண்டில் சாதனையான 94 சாம்பியன் பட்டங்கள் என்ற சாதனையை பெடரர் சமன் செய்தார்.


இன்றைய தினம்

1.இன்று உலக அயோடின் தினம் (Global Iodine Day).
ஆண்டுதோறும் உலக அயோடின் தினம் அக்டோபர் 21ஆம் நாள் கொண்டாடப்படுகிறது. அயோடின் பற்றாக்குறை குறித்து அனைவருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இத்தினம் கொண்டாடப்படுகிறது. அயோடின் சத்துக் குறைபாட்டால் இனம் வயதினரின் அறிவுத்திறன் பாதிக்கப்படும். பெரியவர்க்கு நரம்புத் தளர்ச்சி ஏற்படும். எனவே தினமும் அயோடின் கலந்த உப்பினைப் பயன்படுத்த வேண்டும்.

 

–தென்னகம்.காம் செய்தி குழு