தமிழகம்

1.அதிமுகவின் இரு அணிகளும் இணைந்ததைத் தொடர்ந்து ஓ. பன்னீர்செல்வம் துணை முதல்வராகவும், அவரது அணியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் கே. பாண்டியராஜன் அமைச்சராகவும் பொறுப்பேற்றுக் கொண்டனர்.இவர்களுக்கு ஆளுநர் வித்யாசாகர் ராவ் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு உறுதிமொழியையும் செய்து வைத்தார்.


இந்தியா

1.மகராஷ்டிரா அரசு , நேரடி பண பரிமாற்றத்திற்காக MahaDBT & MahaVASTU என்ற இரு இணைய வலையமைப்பை உருவாக்கியுள்ளது.
2.Federation of Indian Chambers of Commerce and Industry (Ficci) பொதுச்செயலாளராக, முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங்கின் ஊடக ஆலோசகர் சஞ்சய் பாரு நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
3.ராணுவ வீரர்கள் தங்களது மாதந்திர சம்பளம் மற்றும் இதர படிகள் பற்றி அறிந்துகொள்ள Humraaz என்ற செயலியை இந்திய ராணுவம் உருவாக்கியுள்ளது.
4.சமீபத்தில் ஆசிரியர்கள் வகுப்பறைக்கு அலைபேசிகளை கொண்டுவர ஹரியானா அரசு தடை விதித்துள்ளது.
5.வேளாண் பொருட்களை சந்தைப்படுத்த மத்திய வேளாண் துறை e-RaKAM என்ற இணைய வலையமைப்பை உருவாக்கியுள்ளது.


வர்த்தகம்

1.Small Industries Development Bank of India (SIDBI)- வின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனராக முகமது முஸ்தபா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.


உலகம்

1.பாகிஸ்தானின் அன்னை தெரசா என்று அழைக்கப்படும் டாக்டர் ரூத் பாவ் சமீபத்தில் காலமானார். இவர் ஜெர்மனியில் பிறந்தவர், 1960ஆம் ஆண்டில் முதல் முதலாக பாகிஸ்தானுக்கு சென்றார். அங்கு சென்ற அவர் தொழு நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து சேவை செய்து வந்துள்ளார்.
2.BRICS வர்த்தக அமைச்சர்களின் மாநாடு ஷாங்காய் நகரில் நடைபெற்று முடிந்துள்ளது.


இன்றைய தினம்

1.இன்று சர்வதேச அடிமை வாணிப நினைவூட்டல் தினம் (International Day for the Remembrance of the Slave Trade and its Abolition).
ஆப்பிரிக்கத் தீவில் உள்ள ஹெய்ட்டி என்ற பகுதியில் அடிமைகள் தங்கள் இழிநிலைக்கு எதிராக 1791 ஆகஸ்டு 22 நள்ளிரவு முதல் 23 வரை போராடினர். அடிமை வாணிப முறையை ஒழிக்க முதன்முதலில் போராட்டம் நடைபெற்ற ஹெய்ட்டியில் 1998ஆம் ஆண்டு ஆகஸ்டு 23 அன்று நினைவு விழா கொண்டாடப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் இத்தினம் கொண்டாடப்படுகிறது.

 

– தென்னகம்.காம் செய்தி குழு