இந்தியா

1.மத்திய அரசு ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் 31-ம் தேதியை ‘ராஷ்ட்ரிய ஏக்தா திவாஸ்’ என்ற பெயரில் படேலின் பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறது.அதையொட்டி தயான் சந்த் தேசிய விளையாட்டு அரங்கில் ‘ரன் ஃபார் யுனிட்டி’ என்ற தலைப்பில் 1.5 கி.மீ. ஓட்டம் நிகழ்த்தப்பட்டது.
2.டோக்லாம் எல்லையைப் பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டுள்ள இந்தோ – திபெத் எல்லை போலீஸ் படை, டோக்லாமில் சீன ராணுவ நடமாட்டம் உள்ளதா என்பதைக் கண்டறிய இஸ்ரோவின் ஜிசாட்-6 செயற்கைக்கோளை பயனபடுத்தி வருகிறது.
3.இந்திய ராணுவத்தில் ஜெர்மன் ஷெப்பர்ட், லேப்ரடார், கிரேட் ஸ்விஸ் மலை நாய்கள் பணிக்கு பயன்படுத்தப்பட்டு வருகின்றன.இவற்றுடன், முதன்முறையாக முதோல் ரக நாட்டு நாய்கள் ராணுவத்தில் பணியில் சேர்க்கப்படவுள்ளன.முதல் கட்டமாக இந்த ரகத்தைச் சேர்ந்த 6 நாய்கள் தேர்வு செய்யப்பட்டு, கர்நாடகாவில் ஒரு வருடமாக பயிற்சி பெற்று வருகிறன்றன. பயிற்சி நிறைவு பெற்றதும், காஷ்மீர் மாநிலத்தில் எல்லை காக்கும் பணியில் அமர்த்தப்பட இருக்கிறது.
4.4வது i – Bharat 2017 மாநாடு டெல்லியில் நடைபெற்றுள்ளது. பாரத் நெட் திட்டத்தின் முதல் பகுதி டிசம்பர் 2017ல் நிறைவு பெரும் என இம்மாநட்டில் கலந்து கொண்ட மத்திய தொலைத்தொடர்பு செயலாளர் அறிவித்துள்ளார்.
5.உத்திரபிரதேசத்தில் அமைந்துள்ள காசியாபாத் மாநகராட்சியின் தூய்மை இந்தியா திட்ட தூதராக , கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா நியமிக்கப்பட்டுள்ளார்.


உலகம்

1.சவுதியில் 2018-ம் ஆண்டு முதல் விளையாட்டு மைதானங்களுக்குச் செல்ல பெண்களுக்கு அனுமதி அளிக்கப்படும் என்று அந்நாடு கூறியுள்ளது.
2.மனித உரிமைகளுக்கான ஐரோப்பிய யூனியனின் சக்ஹரோவ் பரிசு, வெனிசுலா நாட்டில் ஜனநாயகத்திற்காக போராடுபவர்களுக்கவும், அரசியல் காரணங்களுக்காக சிறையில் இருப்பவர்களுக்காகவும் வழங்கப்பட்டுள்ளது.


இன்றைய தினம்

1.1994 – டார்ம்சிட்டாட்டியம் என்ற தனிமம் கண்டுபிடிக்கப்பட்டது.

 

–தென்னகம்.காம் செய்தி குழு