தமிழகம்

1.ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட உத்தரவிட்டுள்ளதாக தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்துள்ளார். சுற்றுச்சூழல் துறையின் பரிந்துரையை ஏற்று இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
2.தமிழகத்தில் டி.எஸ்.பிகள், உதவி ஆணையர்கள் 55 பேர் இடமாற்றம் செய்து டிஜிபி டி.கே.ராஜேந்திரன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
3.மாதா அமிர்தானந்தமயி மடத்தின் தற்சார்பு கிராம திட்டம் சார்பில் இயற்கைப் பொருள்களால் தயாரிக்கப்பட்ட மீண்டும் பயன்படுத்தக் கூடிய நாப்கின்கள் திங்கள்கிழமை அறிமுகம் செய்யப்பட்டன.
4.அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்துக்காக அமைக்கப்பட்டுள்ள புதிய அலுவலகம் ஜூன் 3-இல் திறக்கப்படும் என்று அந்தக் கட்சியின் துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்துள்ளார்.


இந்தியா

1.புதுச்சேரி அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் தனியாக டியூசன் நடத்துவதற்கு தடை விதித்து அம்மாநில பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
2.தமிழகம், கேரளாவில் தென்மேற்குப் பருவ மழை தொடங்கியதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.2011ம் ஆண்டுக்குப் பிறகு இந்த ஆண்டுதான் தென்மேற்குப் பருவ மழை முன்கூட்டியே தொடங்கியிருப்பதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
3.காத்திருப்பு அல்லது ஆர்ஏசி முறையில் ரயில்வே டிக்கெட் முன்பதிவு செய்யும் போது, அது கன்ஃபார்ம் ஆக எத்தனை சதவீதம் வாய்ப்பு உள்ளது என்பது குறித்து மொபைல் செயலியே இனி சொல்லிவிடும்.ஐஆர்சிடிசியின் மொபைல் ஆப்பில் இன்று முதல் இந்த புதிய சேவை இணைகிறது.
4.கிழக்கு நாடுகளின் கொள்கை அடிப்படையில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி 3 நாடுகள் அரசுமுறைப் பயணத்தை செவ்வாய்கிழமை மேற்கொண்டார்.ஆசியான் எனப்படும் கிழக்கு நாடுகளின் கூட்டமைப்பில் இடம்பிடித்துள்ள இந்தோனேஷியா, சிங்கப்பூர் மற்றும் மலேஷியா ஆகிய 3 நாடுகளுக்கும் 5 நாள் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டார். இதுகுறித்து தனது ஃபேஸ்புக் பக்கத்திலும் அவர் பதிவிட்டுள்ளார்.


வர்த்தகம்

1.டிவிஎஸ் குழுமத்தைச் சேர்ந்த வீல்ஸ் இந்தியா நிறுவனத்தின் லாபம் நான்காவது காலாண்டில் 12.7 சதவீதம் அதிகரித்துள்ளது.


உலகம்

1.பாகிஸ்தானில் பொதுத் தேர்தல் முடிந்து, புதிய அரசு அமையும் வரையிலான இடைக்காலப் பிரதமராக, அந்த நாட்டின் உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி நாஸிருல் முல்க் (67) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.


விளையாட்டு

1.சென்னையில் வரும் ஜூன் 1-ஆம் தேதி தொடங்கவுள்ள மாநில சப்-ஜூனியர், ஜூனியர் நீச்சல் போட்டிகளில் 650 வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.


ன்றைய தினம்

1.இன்று ஐக்கிய நாடுகள் சர்வதேச அமைதி காப்போர் தினம்(International Day of UN Peacekeepers)

யுத்தத்தின்போது சமாதானத்தை ஏற்படுத்தவும்நிவாரணங்களை ஒருங்கிணைக்கவும்அமைதி காப்பாளர்கள் மற்றும் கண்காணிப்பாளர்களை உரிய இடங்களில் ஐ.நாசபை பணியமர்த்துகிறது.ஐக்கிய நாடுகளின் அமைதிகாக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள ஆண்பெண் இருபாலரையும் கௌரவிக்கவும்சமாதானத்தில் உயிர் நீத்தவர்களை நினைவுகூரவும் 2001ஆம் ஆண்டுமுதல் இத்தினம் அனுசரிக்கப்படுகிறது.

 

–தென்னகம்.காம் செய்தி குழு