Current Affairs – 06 September 2017
உலகம்
1.விளாடிவோஸ்டோக் நகரில் நடைபெறும் கிழக்கு பொருளாதார மாநாட்டில் கலந்து கொள்வதற்காக மத்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் நேற்று ரஷ்யா சென்றடைந்தார்.
2.ஆண்ட்ராய்டு சென்ட்ரல் டிஜிட்டல் நிறுவனம் உலகிலேயே மிகக்குறைந்த அளவில் அதாவது ரூ. 2 ஆயிரம் செலவில் ஆளில்லா விமானங்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறது.இதில் 0.3 எம்.பி. திறனுள்ள கேமிரா பொருத்தப்பட்டுள்ளது.
விளையாட்டு
1.இந்தியாவில் முதல் முறையாக விளையாட்டு வீரர் கையில் விளையாட்டுத்துறை மந்திரி பதவி வழங்கப்பட்டுள்ளது.ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற ராஜ்யவர்த்தன் சிங் விளையாட்டுத்துறை மந்திரியாக நியமிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இன்றைய தினம்
1.1951 – தினமலர் நாளிதழ் ஆரம்பிக்கப்பட்டது.
– தென்னகம்.காம் செய்தி குழு