இந்தியா

1.Tata டிரஸ்ட் சார்பில் ஜார்கண்ட், மகாராஷ்டிரா, ஒடிஷா & குஜராத் மாநிலங்களில் 45 வட்டாரங்களின் பழங்குடியின மக்களின் மேம்பாட்டுக்காக சினி ( CInI ) திட்டம் துவங்கப்பட்டுள்ளது.
2.இந்தியா – பெலாரஸ் இடையிலான 25 ஆண்டுகால ராஜீய உறவை சிறப்பிக்கும் வகையில் பிரதமர் மோடி மற்றும் பெலாரஸ் அதிபர் அலெக்ஸாண்டர் லுகாஷென்கோ இணைந்து நினைவு தபால்தலையை வெளியிட்டுள்ளனர்.
3.2வது, இந்தியா – ஆப்கானிஸ்தான் கூட்டு வியூக கவுன்சில் கூட்டம் புதுடெல்லியில் நடைபெற்றுள்ளது. இதில் இருநாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
4.இந்திய உணவு பாதுகாப்பு & தரக்கட்டுப்பாடு ஆணையம் (FSSAI) FoSCoRIS என்ற இணையவலை அமைப்பை உருவாக்கியுள்ளது.
5.பஞ்சாப் தேசிய வங்கி ( PNB ) , வாடிக்கையாளர்கள் ஒரு மாதத்தில் 5 முறைக்கு மேல் ATM வழியாக பணம் எடுப்பதற்கு ரூ 10 கட்டணம் விதிக்கப்படும் என அறிவித்துள்ளது.
6.மகாராஷ்டிரா அரசு அனைத்து அவசரகால அழைப்புகளுக்கும் ( காவல் , தீ , மருத்துவம் ) 112 என்ற ஒரே எண்ணை மட்டும் அமல்படுத்த உள்ளதாக அறிவித்துள்ளது.
7.கருடா என்ற பெயரில் போக்குவரத்து நெரிசலை சமாளிக்க ஆண் காவலர்கள் இரு சக்கர வாகன ரோந்து படையையும்,சக்தி என்ற பெயரில் பெண்களின் பாதுகாப்புக்காக பெண் காவலர்கள் இரு சக்கர வாகன ரோந்து படையையும் உ.பி. மாநிலம், நொய்டா பெருநகர காவல்துறை ஏற்படுத்தியுள்ளது.
8.கேரளாவின் பத்தனம்திட்டா மாவட்டத்தில் பம்பா நதியில் சாப்பிடக்கூடிய புதிய நன்னீர்வகை மீன் இனத்தை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இதற்கு லேபியோ பிலிப்பெரஸ் எனப் பெயரிடப்பட்டுள்ளனர். இது லேபியோ இனத்தைச் சார்ந்ததாகும்.


உலகம்

1.சிங்கப்பூரின் முதல் பெண் ஜனாதிபதியாக ஹலிமா யாகோப் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.மலேசியாவில் சிறுபான்மையினமாக உள்ள முஸ்லீம் மலாய் பிரிவிச் சேர்ந்த ஹலிமா யாகோப், பாராளுமன்றத்தின் சபாநாயகராகவும் செயல்பட்டுள்ளார்.


விளையாட்டு

1.காத்மாண்டுவில் நடைபெற்ற 16 வயதுக்குட்பட்டோருக்கான 2வது தெற்காசிய கூடைப்பந்து போட்டியில் இந்தியா அணி பட்டம் வென்றுள்ளது.இரண்டாவது இடத்தை பங்களாதேஷ் , மூன்றாவது இடத்தை நேபாளம் பிடித்துள்ளன.


இன்றைய தினம்

1.1878 – தி ஹிந்து இதழ் வெளியிட ஆரம்பிக்கப்பட்டது.

 

– தென்னகம்.காம் செய்தி குழு