இந்தியா

1.சர்வதேச மருத்துவ மாநாடு IMTechCon — 2017, ஹரியானாவின் குருகிராமில் நடைபெற்றுள்ளது.
2.விவசாயத்திற்காக மானிய விலையில் வழங்கப்படும் யூரியாவை வேறு பயன்பாடுகளுக்கு உபயோகிப்பதை தடுக்க , யூரியாவுடன் வேப்ப எண்ணெய் கலக்கப்படும் என பிரதமர் அறிவித்துள்ளார்.
3.இந்தியாவில் FIFA U17 உலக கோப்பை கால்பந்து போட்டி நடைபெறுவதை முன்னிட்டு Adidas நிறுவனம் . HereToCreate என்ற பிரச்சார குறும்படத்தை வெளியிட்டுள்ளது.
4.குழந்தைகளுக்கு ஏற்படும் பார்வை இழப்பை தடுப்பது பற்றிய விழிப்புணர்வு புத்தகம். சர்வதேச தொண்டு நிறுவனம் Orbis India இதனை டெல்லியில் அறிமுகம் செய்துள்ளது.
5.Indian Super League கால்பந்து போட்டியில் பங்கு பெறும் Delhi Dynamos அணியின் நல்லெண்ண தூதராக ஹிந்தி நடிகை ஜாக்குலின் பெர்ணாண்டஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
6.ISRO தனது புதிய ஆராய்ச்சி மையத்தை அஸ்ஸாமின் கவுஹாத்தியில் அமைக்கவுள்ளது.இஸ்ரோ சார்பில் ஏற்கனவே திருவனந்தபுரம், அகமதாபாத், சண்டிகரில் ஆராய்ச்சி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
7.ஜம்மு & காஷ்மீர் மாநிலத்தில் சர்வதேச எல்லை மற்றும் எல்லை கட்டுப்பாடு கோடு அருகே வசிக்கும் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை ஆராய உள்துறை சிறப்பு செயலாளர் ரினா மித்ரா தலைமையிலான குழுவை மத்திய அரசு நியமித்துள்ளது.
8.சட்டீஸ்கர் மாநில அரசு குளோரினேற்றம் செய்யப்பட்ட பிளாஸ்டிக் பை மற்றும் PVC பைகளை முற்றிலுமாக தடை ( தயாரிக்க, விற்க, இருப்பு வைக்க, ஏற்றுமதி ) செய்துள்ளது.


உலகம்

1.கடந்த 13 ஆண்டுகளாக ஹைதி நாட்டில் செயல்பட்டு வந்த ஐ.நா. அமைதிப்படை அக்டோபர் 15 முதல் தனது செயல்பாடுகளை முற்றிலும் விலக்கவுள்ளதாக அறிவித்துள்ளது.


இன்றைய தினம்

1.இன்று உலக வறுமை ஒழிப்பு தினம் (World Poverty Eradication Day).
உலகின் மிகப்பெரிய 3 பணக்காரர்களின் ஆண்டு வருமானத்தைவிட 46 ஏழை நாடுகளின் வருமானம் குறைவாகவே இருக்கிறது. உலகில் வாழும் மக்களில் பாதி பேர் ஒரு நாளைக்கு 2 டாலருக்குக் குறைவான பணத்தில் தான் உயிர் வாழ்கின்றனர். தினமும் வறுமையின் காரணமாக 30,000 குழந்தைகள் இறந்துவிடுவதாக யூனிசெஃப் கூறுகிறது. இந்த வறுமையினை ஒழிக்க அக்டோபர் 17இல் இத்தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.

 

 

–தென்னகம்.காம் செய்தி குழு