தமிழகம்

1.திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியில் உள்ள அருள்மிகு சுப்ரமணிய சுவாமி அரசு கலை கல்லூரி வளாகத்தில், வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் மூவாயிரம் ஆண்டுகள் பழமையான ஈம பேழை மற்றும் ஈம தாழிகளை தொல்லியல் துறையினர் கண்டறிந்துள்ளனர்.


இந்தியா

1.2017ம் ஆண்டுக்கான சரளா புரஸ்கார் விருது, Kathapura என்ற சிறுகதை தொகுப்பை வெளியிட்டுள்ள ஒரியா எழுத்தாளர் பனஜ் தேவிக்கு வழங்கப்பட்டுள்ளது.
2.கர்நாடகா முதலவர் சித்தராமையா, எதிர்கால திட்டங்கள், இலக்குகள் பற்றிய Vision – 2025 Project ஐ வெளியிட்டுள்ளார்.
3.ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ்காந்தி விமான நிலையத்தில், இந்தியாவிலேயே முதன்முறையாக சக்கர நாற்காலி மின் தூக்கி ( Wheelchair lift ) நிறுவப்பட்டுள்ளது.
4.சர்வதேச ஊட்டச்சத்து அறிவியல் ஒன்றியம் { International Union of Nutritional Sciences ((IUNS) } வாழும் சாதனையாளர் விருதை ( Living Legend Award ) இந்தியாவின் மாதப் பாம்ஜிக்கு ( Mahtab Bamji ) வழங்கியுள்ளது.


உலகம்

1.ரஷ்யா – பாகிஸ்தான் இணைந்த இராணுவ பயிற்சி DRUZBA 2017, ரஷ்யாவில் நடைபெறுகிறது.DRUZBA 2016 பாகிஸ்தானில் நடைபெற்றுள்ளது.


இன்றைய தினம்

1.1932 – இந்திய வான்படை நிறுவப்பட்டது.

 

–தென்னகம்.காம் செய்தி குழு