இந்தியா

1.பிரபல ஹிந்தி பாடல் ஆசிரியர் மற்றும் கதாசிரியர் ஜாவேத் அக்தருக்கு, ஹிருதயநாத் மங்கேஸ்கர் விருது வழங்கப்பட்டுள்ளது. ஹிருதயநாத் மங்கேஸ்கர் பிரபல திரையிசை பாடகி லதா மங்கேஸ்கரின் உடன் பிறந்த சகோதரர் ஆவார்.
2.மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் ரஞ்சித் குமார் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
3.சபரிமலை ஐயப்பன் கோயில் புதிய மேல்சாந்தியாக திருச்சூரைச் சேர்ந்த உன்னி கிருஷ்ணன் நம்பூதிரி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.மாளிகைபுரம் கோயில் மேல்சாந்தியாக அனீஷ் நம்பூதிரி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
4.உலக அளவில் மாசுபாடுகளால் அதிக இறப்பு ஏற்படும் நாடுகளில் இந்தியா ஐந்தாவது இடத்தில் உள்ளது.
சீனா 16வது இடத்தில் உள்ளது.2015 ஆம் ஆண்டு உலக அளவில் நிகழ்நத இறப்புகளில் 9 மில்லியன் பேரின் மரணத்தோடு தொடர்படையதாக மாசுபாடு இருந்துள்ளது என்று “த லென்செட்” மருத்துவ சஞ்சிகை தெரிவித்துள்ளது.
5.விதவைகளை மறுமணம் செய்வோருக்கு ரூ.2 லட்சம் உதவித்தொகை வழங்கப்படும் என மத்திய பிரதேச முதல்வர் அறிவித்துள்ளார்.
6.குஜராத்தின் பவ்நகரில் உள்ள கோகா பகுதியில் இருந்து பரூச் நகரின் டஹேஜ் பகுதிக்கு இடையே படகு போக்குவரத்தை பிரதமர் மோடி துவக்கி வைத்துள்ளார்.


உலகம்

1.2017ம் ஆண்டுக்கான உலக உணவு பரிசு , ஆப்ரிக்க வளர்ச்சி வங்கியின் தலைவராக பணியாற்றிவரும் Dr. Akinwumi Adesina க்கு வழங்கப்பட்டுள்ளது.கடந்த 25 ஆண்டுகளாக நைஜீரியாவின் உணவு உற்பத்தியை பெருக்க இவர் மேற்கொண்ட சிறப்பான முயற்சிகளுக்காக இந்த பரிசு வழங்கப்பட்டுள்ளது. இதன் பரிசுத்தொகை 2,50,000 அமெரிக்க டாலர்கள் ஆகும்.
2.சுற்றுச்சூழல் பற்றி ஆராய்ச்சி மற்றும் புத்தாக்கங்களில் ஈடுபடுவோருக்காக வழங்கப்படும் Blue Planet Prize , அமெரிக்க பேராசிரியர் C. Daily மற்றும் ஜெர்மனி பேராசிரியர் Hans J. Schellnhuber ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது.இதற்கான பரிசுத்தொகை தலா 50 மில்லியன் யென் வழங்கப்பட்டுள்ளது.
3.மங்கோலியாவில் நடைபெற்ற உலக பாடிபில்டிங் மற்றும் உடற்கூறு விளையாட்டுப் போட்டியில் தமிழ்நாட்டை சேர்ந்த வி.ஜெயபிரகாஷ், 75 கிலோ பிரிவில் தங்கம் வென்றுள்ளார்.


இன்றைய தினம்

1.1998 – டிஸ்கவரி விண்ணோடம் STS-95 என்ற விண்கப்பலுடன் விண்ணுக்கு ஏவப்பட்டது.
2.1998 – ஐக்கிய அமெரிக்காவில் உயர் வரையறு தொலைக்காட்சி (HDTV) ஆரம்பமானது.

 

–தென்னகம்.காம் செய்தி குழு