இந்தியா

1.பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடு டிசம்பர் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.முதலில் ஜூலை 31 கடைசி எனவும், பின் ஆகஸ்ட் 31 கடைசி தேதி எனவும் அறிவிக்கப்பட்டு இருந்தது.
2.பாரத் நெட் திட்டத்தின் கீழ் ஆகஸ்ட் 28 வரை 31,680 கிராம பஞ்சாயத்துகளுக்கு இணைய இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.2019 மார்ச் 31க்குள் 2.5 லட்சம் கிராம பஞ்சாயத்துகளுக்கும் இணைய இணைப்பு வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
3.புதிய தேர்தல் ஆணையராக ஓய்வு பெற்ற IAS அதிகாரி சுனில் அரோரா நியமிக்கப்பட்டுள்ளார்.தற்போது தலைமை தேர்தல் ஆணையராக அக்சல் குமார் ஜோதி மற்றும் தேர்தல் ஆணையராக ஓம் பிரகாஷ் ராவத் உள்ளனர்.
4.புதிய உள்துறை செயலாளராக ராஜிவ் கவுபா IAS நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
5.31 ஆகஸ்ட் 2017-ல் உள்துறை செயலாளர் பதவியில் இருந்து ஓய்வு பெற்றுள்ள ராஜிவ் மெகரிஷி Comptroller and Auditor General ஆக நியமிக்கப்பட்டுள்ளார்.
6.Central Board of Secondary Education (CBSE) யின் தலைவராக அனிதா கர்வால் IAS நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
7.தேசிய திறன் வளர்ச்சி முகமை ( National Skill Developement Agency ) பொது இயக்குநராக (Directo General ) ராஜேஸ் குமார் சதுர்வேதி IAS நியமிக்கப்பட்டுள்ளார்.
8.சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக பணியாற்றி ஓய்வு பெற்ற எஸ்.ரத்தினவேல் பாண்டியன், “என் வாழ்க்கை பயணம் – ஏ டூ இசட் ” என்ற சுயசரிதை நூலை ஆங்கிலத்தில் எழுதியுள்ளார்.


இன்றைய தினம்

1.1978 – அண்ணா பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது.

 

– தென்னகம்.காம் செய்தி குழு