இந்தியா

1.மத்திய பிரதேச மாநில அரசின் சார்பில் வழங்கப்படும் 2017ம் ஆண்டுக்கான லதா மங்கேஷ்கர் விருது திரைப்பட இசையமைப்பாளர்கள் பப்பி லஹரி, உஷா கண்ணா, அனு மாலிக் மற்றும் பின்னணி பாடகர்கள் அல்கா யாக்னிக் மற்றும் உதித் நாராயண் ஆகியோருக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
2.இந்தியாவின் சார்பில் மிகப்பெரிய அறிவு மற்றும் தொழில்நுட்ப மாநாடு மற்றும் கண்காட்சி புதுடெல்லியில் நவம்பர் 14 – 15ல் நடைபெறுகிறது.இந்த மாநாட்டின் இணை பங்குதாரர் நாடாக கனடா இணைந்துள்ளது.
3.ஆயர்வேதம், யோகா , யுனானி, சித்தா மற்றும் ஹோமியோபதி பற்றி வெளியிடப்பட்டுள்ள தபால் தலைகள் கண்காட்சி AYUSH Festival of Stamps 2017 கோவாவில் அக்டோபர் 17 – 18 ல் நடைபெற்றுள்ளது.
4.முதன்முறையாக இந்தியா ரஷ்யா முப்படைகளின் பயிற்சி இந்திரா 2017, அக்டோபர் 19 – 27 வரை விளாடிவோஸ்க் நகரில் நடைபெறுகிறது.
5.130 ஆண்டுகள் பழமையான மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் ரயில் நிலையத்தை பாதுகாக்கவும் புனரமைப்பு பணிகளை மேற்கொள்ள பாரத ஸ்டேட் வங்கி SBI-Project Swachh Iconic CSMT திட்டத்தின் கீழ் ரூ 10 கோடி வழங்கியுள்ளது.
6.Airport Council International (ACI)-Airport Service Quality (ASQ) Survey வழங்கும் 2 – 5 மில்லியன் பயணிகள் பிரிவில் மிகச்சிறந்த விமான நிலையங்கள் விருதுகளை ஜெய்ப்பூர் மற்றும் ஶ்ரீநகர் விமான நிலையங்கள் பெற்றுள்ளன.ஏற்கெனவே 2016லும் ஜெய்ப்பூர் விமான நிலையம் முதலிடம் பெற்றிருந்தது.


விளையாட்டு

1.சர்வதேச கிரிக்கெட் பயிற்சியாளர்களில் அதிக சம்பளம் வாங்கும் பயிற்சியாளராக, இந்திய பயிற்சியாளராக உள்ள ரவி சாஸ்திரி உள்ளார்.ரவி சாஸ்திரி ஒரு ஆண்டுக்கு ரூ. 7 கோடியே 61 லட்சம் சம்பளம் வாங்குகிறார்.
சாஸ்திரிக்கு அடுத்தபடியாக ஆஸ்திரேலிய பயிற்சியாளர் லீமேன் (ரூ.3 கோடியே 57 லட்சம்) அதிக சம்பளம் வாங்குகிறார்.


இன்றைய தினம்

1.1502 – வாஸ்கோ ட காமா இரண்டாவது தடவையாக கோழிக்கோடு வந்தார்.

 

–தென்னகம்.காம் செய்தி குழு