இந்தியா

1.நாட்டிலேயே முதலாவதாக கவன ஈர்ப்பு மற்றும் ஒத்திவைப்பு தீர்மானங்களை இணையம் மூலமாக தாக்கல் செய்யும் வசதியை ராஜஸ்தான் மாநில சட்டசபை சபாநாயகர் ஏற்படுத்தியுள்ளார்.
2.கோயில் அர்ச்சரை திருமணம் செய்துகொள்ளும் பெண்ணுக்கு ரூ.4 லட்சம் நிதி உதவி வழங்கும் கல்யாண மஸ்து திட்டத்தை அமல்படுத்த தெலங்கானா அரசு முடிவு செய்துள்ளது.பிராமண குலத்தைச் சேர்ந்த கோயில் அர்ச்சகர்களை திருமணம் செய்துகொள்ள விரும்பும் பெண்களுக்கு திருமணத்துக்கு முன்பே செலவுக்காக ரூ.1 லட்சம் வழங்கப்படும்.அதன் பிறகு புதுமண தம்பதி பெயரில் அரசு வங்கியில் ரூ.3 லட்சம் டெபாசிட் செய்யப்படும். இந்தப் பணத்தை அவர்கள் 3 ஆண்டுகளுக்குப் பிறகு வட்டியுடன் முழுமையாக எடுத்துக் கொள்ளலாம்.இந்தத் திட்டம் வரும் நவம்பர் 1-ம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளது.
3.சென்னையில் மறைந்த கர்னாடக இசைப் பாடகி எம்.எஸ்.சுப்புலட்சுமி பிறந்தநாள் நூற்றாண்டு விழா கண்காட்சியை துணை ஜனாதிபதி துவக்கி வைத்துள்ளார்.இந்த நிகழ்ச்சியில் எம்.எஸ்.சுப்புலட்சுமியின் இசை வாழ்க்கையைப் பற்றிய ‘குறையொன்றும் இல்லை’ எனும் நூலை துணை ஜனாதிபதி வெளியிட்டுள்ளார்.


உலகம்

1.உலகின் முதலாவது எதிர்மறை உமிழ் மின்னுற்பத்தி நிலையம் ( world’s first ‘negative emissions’ power plant ) ஐஸ்லாந்தில் நிறுவப்பட்டுள்ளது.
2.தெற்கு பசுபிக் தீவு நாடான வனூட்டு ( Vanuatu ) உலகின் முதல் நாடாக குடியேற்ற கட்டணத்தை பிட்காயினாக செலுத்தலாம் என அறிவித்துள்ளது.
3.கிரீஷ் நாட்டில் நடைபெற்ற 12 வயதுக்குள்ளோருக்கான அழகிப் போட்டி Little Miss World 2017ல் இந்தியா சார்பில் கலந்து கொண்ட G.B. பூர்வி Best Performer பட்டம் வென்றுள்ளார்.


விளையாட்டு

1.உலக ரெஸ்லிங் பொழுதுபோக்குப் போட்டியில் கலந்து கொள்ள முதல் இந்திய வீராங்கனையாக கவிதா தேவி தலால் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.கவிதா தேவி தலால் ஹரியானா மாநிலத்தின் மல்வி (Malvi) என்ற குக்கிராமத்தில் பிறந்தவர்.இவர் இந்தியா – பூடான் மற்றும் இந்தியா – நேபாளம் எல்லைப் பகுதிகளைக் காக்கும், சாஷாத்ரா சீமா பால் (Sashastra Seema Bal) என்ற எல்லை ராணுவத்தில் பணிபுரிந்துள்ளார்.


இன்றைய தினம்

1.1905 – நார்வே பிரிந்து சென்றதை சுவீடன் அங்கீகரித்தது.

 

–தென்னகம்.காம் செய்தி குழு