தமிழகம்

1.இந்தியாவின் முதல் திருநங்கை காவல் உதவி ஆய்வாளர் என்ற பெருமையுடன் தனது போலீஸ் பயிற்சியை முழுவதுமாக நிறைவு செய்த திருநங்கை ப்ரித்திகா யாஷினி சூளைமேடு காவல் நிலைய சட்டம் ஒழுங்கு ஆய்வாளராக அக்டோபர் 09ல் பதவியேற்றுள்ளார்.
2.அரசு ஊழியர்களுக்கு 7-வது ஊதியக் குழு பரிந்துரைகள் அக்.1 முதல் பணப்பயனுடன் அமல்படுத்தப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.


இந்தியா

1.48வது கவர்னர்கள் மாநாடு, அக்டோபர் 12 &13 ராஷ்டிரபதி பவனில் நடைபெற்றது.27 மாநில கவர்னர்கள் மற்றும் 3 துணைநிலை ஆளுநர்கள் கலந்து கொள்கின்றனர்.இந்த மாநாட்டின் கருப்பொருள் — புதிய இந்தியா 2022 ( New India 2022 ) ஆகும்.
2.மனைவி மைனர் பெண்ணாக அதாவது 18 வயதுக்கு கீழ் உள்ளவர் என்றால் அவருடன் கணவர் தாம்பத்ய உறவு கொள்வது பலாத்காரத்துக்கு நிகரானது என உச்ச நீதிமன்றம் அக்டோபர் 11ல் தீர்ப்பு வழங்கியுள்ளது.நீதிபதிகள் மதன் பி லோக்கூர், தீபக் குப்தா அடங்கிய அமர்வு இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது.
3.திரு. பிரணாப் முகர்ஜி அவர்கள் ஜனாதிபதியாக பதவி வகித்த காலத்தில் , பல்வேறு பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்று ஆற்றிய உரைகளின் தொகுப்பு Guru – Sangraha பெயரில் என்ற புத்தகமாக National Book Trust சார்பில் வெளியிடப்பட்டுள்ளது.
4.சமூகப் போராளியாக இருந்து டெல்லி முதல்வராக மாறிய அர்விந்த் கேஜ்ரிவால் பற்றிய ஆவணப்படம் நவம்பர் 17-ல் இந்தியாவில் வெளியாகிறது.இப்படம் An Insignificant Man என்ற பெயரில் வெளிவர உள்ளது. இதனை குஷ்பூ ரங்கா மற்றும் வினய் சுக்லா ஆகியோட் இயக்கியுள்ளனர்.
5.நானாஜி தேஷ்முக்கின் நூற்றாண்டு பிறந்த நாள் விழாவை முன்னிட்டு ரூ.5 மதிப்பிலான நினைவு தபால்தலையை பிரதமர் மோடி வெளியிட்டுள்ளார்.தொழில்நுட்பம் மற்றும் ஊரக வாழ்க்கை என்ற தலைப்பில் ஏற்பாடு செய்யப்பட்ட கண்காட்சியை பிரதமர் பார்வையிட்டுள்ளார்.கிராம் சம்வாத் என்ற செயலியையும் பிரதமர் வெளியிட்டுள்ளார்.


விளையாட்டு

1.ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் டீன் ஜோன்ஸ் , ஆப்கானிஸ்தான் அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
2.இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த வேகப்பந்து வீச்சாளர் ஆஷிஷ் நெஹரா நவம்பர் 1-ந்தேதிக்கு பிறகு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற முடிவு செய்துள்ளார்.
3.இந்திய கிரிக்கெட் அணிக்கு தேர்வு பெரும் வீரர்கள் யோ யோ என்ற உடற்தகுதி தேர்வில் கட்டாயம் தேர்வு பெற வேண்டும் என இந்திய கிரிக்கெட் வாரியம் புதிய விதிமுறை வகுத்துள்ளது.ஒரு வீரர் ஒரு குறிப்பிட்ட அளவு தூரத்தை எவ்வளவு நேரத்தில் கடக்கிறார் என்பதே யோ யோ தேர்வு ஆகும். இதில் 20 மீட்டர் தூரத்தை அடிப்படையாக கொண்டு 20 மதிப்பெண்களுக்கு பலநிலை தேர்வு நடைபெறும். அதில் 16.1 மதிப்பெண்கள் பெறுபவர்கள் மட்டுமே இந்திய அணியில் இடம்பிடிக்க முடியும்.


இன்றைய தினம்

1.இன்று உலக எலும்புப்புரை தினம் (World Osteoporosis Day).
மாதவிடாய் நிற்றலுக்குப் பிறகு எலும்புப்புரை நோய் பெண்களுக்கு அதிகமாக ஏற்படுகிறது. எலும்புப்புரை என்பது அதிகமாக எலும்பு முறிவு ஆபத்தை ஏற்படுத்தும் ஒரு எலும்பு சம்பந்தப்பட்ட நோய். உலக எலும்புப்புரை அமைப்பு 1996ஆம் ஆண்டில் அக்டோபர் 20 ஐ உலக எலும்புப்புரை தினமாக அறிவித்தது. உலக சுகாதார அமைப்பால் அங்கீகரிக்கப்பட்டு இத்தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.
2.இன்று உலகப் புள்ளியியல் தினம் (World Statistics Day).
ஏழை, எளிய மக்களுக்காக அரசால் வரையறுக்கப்படும் திட்டங்கள் அனைத்தும் புள்ளிவிவரங்களைச் சார்ந்தே உள்ளன. பல்வேறு அரசுத்துறைகளிலும், பல்வேறு வகையான இடைநிலைப் புள்ளிவிவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. ஐக்கிய நாடுகள் சபை அக்டோபர் 20ஆம் தேதியை உலகப்புள்ளியியல் தினமாக 2010ஆம் ஆண்டில் அறிவித்தது. புள்ளிவிபரங்களின் வெற்றி மற்றும் சேவையைக் கொண்டாடுவதே இத்தினத்தின் நோக்கம்.

 

–தென்னகம்.காம் செய்தி குழு