இந்தியா

1.பத்மஸ்ரீ விருது வென்ற முன்னணி பத்திரிக்கையாளரான முசாபர் ஹுசைன் மும்பையில் நேற்று மரணமடைந்தார்.
2.ஆசியாவிலேயே 2-வது பெரிய அணை என்ற சிறப்புடன், 43-வது ஆண்டில் இடுக்கி அணை அடியெடுத்து வைக்கிறது.அணையின் மொத்த உயரம் 555 அடியாகும்.


விளையாட்டு

1.தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான ஐந்தாவது ஒருநாள் போட்டியில் 73 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி, ஒருநாள் தொடரை 4-1 என கைப்பற்றி சாதனை படைத்துள்ளது.இந்திய அணியின் ரோகித் சர்மா ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.தென்ஆப்ரிக்கா மண்ணில் இந்திய அணி ஒருநாள் தொடரை வெல்வது இதுவே முதல்முறையாகும்.


இன்றைய தினம்

1.இன்று உலக காதலர் தினம் (World Valentine’s Day).
ரோமாபுரியை ஆட்சிபுரிந்த இரண்டாம் கிளாடியஸ் என்ற மன்னன் தனது நாட்டில் வாழும் இளைஞர்கள் காதலிக்கக்கூடாது எனத் தடைவிதித்தான். வாலன்டைன் என்கிற கிறிஸ்துவ பாதிரியார் காதலை ஆதரித்து பலருக்கு காதல் திருமணம் செய்துவைத்தார். காதலர்களுக்கு ஆதரவாக இருந்த வாலண்டைனின் தலை கி.பி. 269ஆம் ஆண்டு பிப்ரவரி 14இல் வெட்டப்பட்டது. அவரின் இறந்த தினமே காதலர் தினமாகக் கொண்டாடப்படுகிறது.

 

–தென்னகம்.காம் செய்தி குழு