இந்தியா

1.கேரள அரசு பள்ளிகளில் பயிலும் 60,000 மாணவர்களுக்கு மாநில உள்கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்ப கல்வி சார்பில் அனிமேசன், எலக்ட்ரானிக்ஸ், ஹார்டுவேர், இணைய பாதுகாப்பு உள்ளிட்ட அறிமுக பயிற்சி வகுப்பு Hi – School Kuttikkootam என்ற பெயரில் நடைபெற்றுள்ளது.
2.இந்தியா – இலங்கை கடற்படைகளுக்கு இடையிலான பயிற்சி SLINEX , விசாகப்பட்டினத்தில் செப்டம்பர் 07 முதல் செப்டம்பர் 14 வரை நடைபெறுகிறது.
3.05 செப்டம்பர் 2017 நிலவரப்படி ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் [ Armed Forces (Special Powers) Acts – AFSPA ] அமலில் இருக்கும் மாநிலங்கள் பட்டியல்.01) அருணாசலப் பிரதேசம்,02) அஸ்ஸாம்,03) மணிப்பூர்,04) மேகாலயா,05) மிசோரம்,06) நாகலாந்து,07) ஜம்மு காஷ்மீர்.
4.ஹைதராபாத்தில் இயங்கி வரும், அறிவியல் மற்றும் தொழிலக ஆய்வு மன்றத்தின் (CSIR) உயிரணு மற்றும் மூலக்கூறு உயிரியல் மையத்தின் (Centre for Cellular Molecular Biology, CCMB) நிறுவன இயக்குனரான புஷ்பமித்ரா பார்கவா காலமானார்.
5.ஏழை , எளியோரின் குறைகளை கேட்டு அதனை நிவார்த்தி செய்யும் விதமாக , ஒவ்வொரு வாரமும் வெள்ளிகிழமை ” Day of Helping Hand / உதவும் கரங்கள் தினம் ” கடைபிடிக்கப்படும் என ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார்.
6.அரபு நாடுகளில் இருந்து சுற்றுலா பயணிகளை ஈர்க்க, கேரளா சுற்றுலாத்துறை Yalla Kerala(கேரளாவிற்கு செல்வோம்) என்ற பிரச்சார இயக்கத்தை முதன் முதலில் துபாயில் துவக்கியுள்ளது.


உலகம்

1.Friends of Australia திட்டத்தின் கீழ் ஆஸ்திரேலியா சுற்றுலா துறை, பிரபல ஹிந்தி நடிகை Parineeti Chopra-வை நல்லெண்ண தூதராக நியமனம் செய்துள்ளது.


விளையாட்டு

1.8வது மேடை நாடக ஒலிம்பிக் (Theatre Olympics) 2018 பிப்ரவரி 17 முதல் ஏப்ரல் 8 வரை இந்தியாவில் நடைபெறுகிறது.இதன் கருப்பொருள் – Flag of Friendship ஆகும்.


இன்றைய தினம்

1.இன்று உலக தற்கொலை தடுப்பு தினம் (World Suicide Prevention Day).
உலகில் சராசரியாக 40 நொடிக்கு ஒருவர் தற்கொலை செய்து கொள்கிறார். தற்கொலை என்பது ஒரு சர்வதேச பிரச்சினையாக உள்ளது. தற்கொலையை தடுப்பதற்கு உலக தற்கொலை தடுப்பு அமைப்பு 1960ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பும், உலக சுகாதார அமைப்பும் செப்டம்பர் 10 ஐ உலக தற்கொலை தடுப்பு தினமாக அறிவித்தது. இது 2003ஆம் ஆண்டு முதல் கடைப்பிடிக்கப்படுகிறது.
2.2002 – சுவிட்சர்லாந்து, ஐநாவில் இணைந்தது.
3.இன்று சீனாவில் ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது.

 

– தென்னகம்.காம் செய்தி குழு