தமிழகம்

1.சசிகலா கணவர் நடராஜன் உடல்நலக்குறைவால் சென்னையில் இன்று காலமானார்.


இந்தியா

1.உலக வர்த்தக அமைப்பின் இரண்டு நாள் மாநாடு டெல்லியில் இன்று தொடங்கிய நிலையில், 7 நாடுகளில் வர்த்தக மந்திரிகளும், 50 நாடுகளின் பிரதிநிதிகளும் பங்கேற்றனர்.
2.ஜம்மு-காஷ்மீர் மாநிலம் தெஹ்ரீக்-இ-ஹூரியத் பிரிவினைவாத இயக்கத்தின் புதிய தலைவராக அஷ்ரப் ஷெராய் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.


உலகம்

1.சீன புதிய ராணுவ மந்திரியாக முன்னாள் ஏவுகணைப்பிரிவு தளபதியும், அதிபர் ஜின்பிங்குக்கு மிகவும் நெருக்கமானவருமான வேய் பெங்கே நியமிக்கப்பட்டுள்ளார்.
2.130 மொழிகளை பேசும் குழந்தைகளுக்கு கலைகள், படைப்பாற்றலுடன் கூடிய கற்றல்திறனை ஊக்குவிக்கும் பிரிட்டன் நாட்டு பெண்மணிக்கு உலகின் சிறந்த நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டது.ஐக்கிய அரபு அமீரக நாடுகளின் பிரதமரும், துபாய் மன்னருமான ஷேக் முஹம்மது பின் ரஷித் அல் மக்தூம் நேற்று நடைபெற்ற விழாவில் உலகின் சிறந்த நல்லாசிரியர் விருதையும், பத்து லட்சம் அமெரிக்க டாலர்களை ரொக்கப் பரிசையும் ஆண்டிரியா ஸபிரக்கோவுக்கு வழங்கி கவுரவித்தார்.
3.ரஷியாவின் அதிபராக நான்காவது முறை பொறுப்பேற்கவுள்ள விளாடிமிர் புதின் சுயேட்சை வேட்பாளராக 76.67 சதவீதம் வாக்குகளுடன் அபார வெற்றி பெற்றுள்ளார்.


இன்றைய தினம்

1.இன்று சர்வதேச மகிழ்ச்சி தினம் (International Day of Happiness).
மகிழ்ச்சி எது எனக் கேட்டால் ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு அர்த்தத்தைக் கூறுவார்கள். போரையும், வறுமையையும் உலகளவில் முடிவுக்குக் கொண்டுவருவதே மகிழ்ச்சி என ஐ.நா. சபை கருதுகிறது. மகிழ்ச்சியே மனிதனின் அடிப்படை லட்சியம் என்கிற அடிப்படையில் ஐ.நா. பொதுச்சபை 2012ஆம் ஆண்டு ஜூலை 12 அன்று மார்ச் 20ஐ சர்வதேச மகிழ்ச்சி தினமாக அறிவித்தது.
2.இன்று உலக சிட்டுக்குருவிகள் தினம் (World Sparrow Day).
நவீன கட்டிட அமைப்பானது சிட்டுக்குருவிகள் கூடுகட்டி வாழ்வதற்கு ஏற்றதாக இல்லை. இதுதவிர தெருக்களில் சிட்டுக்குருவிகளுக்குத் தேவையான தானியங்கள் கிடைப்பதில்லை. விவசாய நிலங்களில் பூச்சிக் கொல்லி மருந்துகள் அடிக்கப்படுகின்றன. நிலம், நீர் மாசுகாரணமாகவும், சிட்டுக்குருவிகளின் எண்ணிக்கை குறைந்து வருகின்றன. ஆகவே, சிட்டுக்குருவிகள்மீது விழிப்புணர்வு ஏற்படுத்த இத்தினம் அனுசரிக்கப்படுகிறது.

 

–தென்னகம்.காம் செய்தி குழு