இந்தியா

1.அடிப்படை கழிப்பறை வசதியின்றி வசிக்கும் அதிக மக்களை கொண்ட நாடுகளின் வரிசையில் இந்தியா முதலிடத்தில் உள்ளதாக வாட்டர்எய்டு என்ற நிறுவனம் நடத்திய ஆய்வின் முடிவில் தெரிவித்துள்ளது.


உலகம்

1.பிரட்டனில் ஆப்கானிஸ்தான் போரின்போது ராணுவ வீரர்களை காப்பாற்றிய மாலி என்னும் நாய்க்கு அந்நாட்டில் விலங்குகளுக்கு வழங்கப்படும் உயரிய விருதான டிக்கென் விருது வழங்கப்பட்டுள்ளது.கடந்த 1943-ம் ஆண்டு முதல் இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது. முதன்முறையாக இரண்டாம் உலக போரில் உதவிய மூன்று புறாக்களுக்கு இந்த விருது வழங்கப்பட்டது. அதன்பின் ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
2.புகழ்பெற்ற ஓவியரான லியானர்டோ டா வின்சி வரைந்த இயேசுவின் ஓவியம் 450 மில்லியன் டாலருக்கு ஏலம் எடுக்கப்பட்டு உலக சாதனை படைத்துள்ளது.அமெரிக்காவில் நடைபெறும் ஓவியக் கண்காட்சியில் வைக்கப்பட்ட இந்த ஓவியம் ஏலம் விடப்பட்டுள்ளது.


விளையாட்டு

1.தென் ஆப்ரிக்காவை சேர்ந்த ஷேன் டேட்ஸ்வெல் ஒருநாள் போட்டியில் அதிரடியாக விளையாடி 490 ரன்கள் எடுத்து சாதனை புரிந்துள்ளார்.தென் ஆப்ரிக்காவில் உள்ளூர் அணிகளுக்கு இடையே கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வருகிறது. அங்குள்ள நார்த்வெஸ்ட் யுனிவர்சிடி புக்கே அணிக்கும், போட்ச் டார்ப் அணிக்கும் இடையே நேற்று ஒருநாள் போட்டி நடைபெற்றது. முதலில் விளையாடிய நார்த்வெஸ்ட் அணி வீரர்கள் சிறப்பாக விளையாடினர்.இறுதியில் அந்த அணி 50 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 677 ரன்கள் எடுத்தது.இதில் ஷேன் டேட்ஸ்வெல் 151 பந்துகளில் 57 சிக்சர்கள் மற்றும் 27 பவுண்டரிகளுடன் 490 ரன்கள் எடுத்து புதிய உலக சாதனை படைத்துள்ளார்.


இன்றைய தினம்

1.இன்று உலக கழிப்பறை தினம் (World Toilet Day).
உலக நாடுகளில் 2.5 பில்லியன் மக்கள் சுகாதாரத்தைப் பேணுவதில்லை. 1.1 மில்லியன் மக்கள் திறந்தவெளிக் கழிப்பறைகளை பயன்படுத்தி வருகிறார்கள். இதனால் ஆண்டுதோறும் 2 லட்சம் குழந்தைகள் நோயால் பாதிக்கின்றனர். இவர்களைப் பாதுகாக்க, உலக சுகாதாரத்தைப் பாதுகாக்க ஐக்கிய நாடுகள் சபை நவம்பர் 19 ஐ உலகக் கழிப்பறை தினமாக 2013ஆம் ஆண்டில் அறிவித்தது.
2.இன்று சர்வதேச ஆண்கள் தினம் (International Men’s Day).
சர்வதேச ஆண்கள் தினம் கொண்டாடுவது என்பது பெண்களுக்கு எதிரானது அல்ல. இத்தினம் ஆண், பெண் சமத்துவத்தை வலியுறுத்தும் வகையில்தான் உள்ளது. இது ஐ.நா. சபையால் அங்கீகரிக்கப்பட்ட தினமாகவும் விளங்குகிறது. உலகில் ஆண்களைக் கௌரவப்படுத்தவும், சமூகத்திற்கு புரிந்த மகத்தான தியாகங்களை நினைவு கூரவும், அவர்களின் பாதுகாப்புக் குறித்த விழிப்புணர்வு கருதியும் இது கொண்டாடப்படுகிறது.

 

–தென்னகம்.காம் செய்தி குழு