இந்தியா

1.மாற்றுத் திறனாளிகளுக்காக சைகை மொழியில் உருவாக்கப்பட்டுள்ள தேசிய கீதத்தை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.இந்த வீடியோ 35 நிமிடங்கள் ஓடக்கூடியது.இதனை பிரபல திரைப்பட இயக்குனர் கோவிந்த் நிஹலானி இயக்கியுள்ளார்.
2.இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதராக சோஹைல் முகம்மது நியமனம் செய்யப்பட்டுள்ளார்.டெல்லியில் உள்ள அந்நாட்டு தூதரகத்தில் இவர் கடந்த ஆகஸ்டு 16-ஆம் தேதி பதவியேற்றுக்கொண்டார்.
3.குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடுவின் செயலராக ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி ஐ.வி.சுப்பா ராவ் நியமிக்கப்பட்டதற்கு நியமனங்கள் குழு கடந்த ஆகஸ்டு 16-ஆம் தேதி ஒப்புதல் வழங்கியுள்ளது.


வர்த்தகம்

1.பாரத ஸ்டேட் வங்கியுடன் அதன் துணை வங்கிகளான ஸ்டேட் பேங்க் ஆஃப் பிகானீர், ஜெய்ப்பூர் (எஸ்பிபிஜே), ஸ்டேட் பேங்க் ஆஃப் ஹைதராபாத் (எஸ்பிஹெச்), ஸ்டேட் பேங்க் ஆஃப் மைசூர் (எஸ்பிஎம்), ஸ்டேட் பேங்க் ஆஃப் பாட்டியாலா (எஸ்பிபி), ஸ்டேட் பேங்க் ஆஃப் திருவாங்கூர் (எஸ்பிடி) ஆகிய 5 வங்கிகள் இணைக்கப்பட்டதை அங்கீகரிக்கும் மசோதா, மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.இந்த இணைப்பின் மூலம் எஸ்பிஐ வங்கி உலக அளவில் 45-ஆவது இடத்தை பிடித்துள்ளது.


உலகம்

1.பெல்ஜியம் நாட்டில் ஆண்டு விழாவில் மக்கள் 10000 முட்டைகளை கொண்டு ராட்சத ஆம்லேட் செய்து பகிர்ந்து உண்டனர்.பெல்ஜியம் நாட்டில் ஆண்டுதோறும் வசந்த காலத்தில் ஆண்டு விழா கொண்டாடப்படுவது குறிப்பிடத்தக்கது.
2.அமெரிக்காவில் நிகழ்த்தப்பட்ட இனவெறித் தாக்குதல் குறித்து அந்த நாட்டின் முன்னாள் அதிபர் ஒபாமா வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவு இதுவரை இல்லாத அளவுக்கு அதிக எண்ணிக்கையில் லைக்ஸ் பெற்று புதிய சாதனை படைத்துள்ளது.கடந்த ஆகஸ்டு 16-ஆம் தேதி நிலவரப்படி 30 லட்சம் லைக்களுடன் இந்த டுவீட் முதல் இடத்தை பிடித்துள்ளது.மறைந்த தென்னாப்பிரிக்க முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலாவின் வாழ்க்கை வரலாற்று வரிகளை மேற்கோள் காட்டி இந்த டுவீட் வெளியிடப்பட்டுள்ளது.


விளையாட்டு

1.பல்கேரிய தலைநகர் சோபியாவில் நடைபெற்ற பல்கேரிய ஓபன் பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் 16 வயதே ஆன லக்ஷயா சென்,குரோசியாவின் டர்கின்ஜாக்கை 18-21, 21-12, 21-17 என்ற செட் கணக்கில் தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.இவர் தரவரிசையில் 167-வது இடத்தில் உள்ளார்.உத்தரகண்டைச் சேர்ந்தவர் ஆவார்.இவர் வெல்லும் இரண்டாவது சீனியர் பட்டம் இதுவாகும்.
2.இங்கிலாந்து-மேற்கிந்தியத் தீவுகள் இடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நேற்று தொடங்கியது.இந்த டெஸ்ட் போட்டி பகல் – இரவு ஆட்டமாக நடைபெற உள்ளது.இங்கிலாந்து அணி விளையாடிய முதல் பகல் – இரவு டெஸ்ட் போட்டி இதுவாகும். சர்வதேச அளவில் பகல் – இரவுவாக நடைபெறவுள்ள 5-ஆவது டெஸ்ட் போட்டி இதுவாகும்.இந்தப் போட்டியில் இளஞ்சிவப்பு நிற பந்து பயன்படுத்துவது குறிப்பிடத்தக்கது.


இன்றைய தினம்

1.1877 – செவ்வாய்க்கோளின் ஃபோபோஸ் துணைக்கோள் கண்டுபிடிக்கப்பட்டது.
2.1928 – சென்னை மியூசிக் அகாடமி அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைக்கப்பட்டது.
3.இன்று பாக்கிஸ்தானில் மர நாள் கொண்டாடப்படுகிறது.

 

– தென்னகம்.காம் செய்தி குழு