இந்தியா

1.டெல்லியில் செயல்படும் நச்சுத்தன்மை வாய்ந்த வாயுக்களை வெளியேற்றும் பொருட்களை பயன்படுத்தும் தொழிற்சாலைகளில் சுற்றுச்சூழல் விதிமுறைகள் கடைப்பிடிக்கப்படுகிறதா என ஆய்வு நடத்த மே 2017ல் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்துக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு இருந்தது.இந்த உத்தரவை கடைபிடிக்காத மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்துக்கு ரூ.2 லட்சம் அபராதம் விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2.காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள வல்லம் – வடகால் சிப்காட் தொழில் பூங்கா வளாகத்தில் விமான (வானூர்தி) உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழில் பூங்கா அமைக்க தமிழக முதல்வரால் அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.
3.ASSOCHEM அமைப்பின் சார்பிலான 3rd Global Investors’ India Forum புதுடெல்லியில் நடைபெற்றுள்ளது.
4.இந்தியா யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திற்கு 585000 அமெரிக்க டாலர்கள் நிதியுதவி வழங்கியுள்ளது.
5.இந்திய கிரிக்கெட் கட்டுப்பாடு வாரியத்தின் இணை உறுப்பினராக புதுச்சேரி சேர்க்கப்பட்டுள்ளது.


உலகம்

1.3D தொழில்நுட்பத்தில் உலகிலேயே முதன்முறையாக பிரிட்டனைச் சேர்ந்த புருனேல் பல்கலைகழக ஆய்வாளர்கள் கையில் அணியக்கூடிய பேட்டரிகளை கண்டு பிடித்துள்ளனர்.
2.முதலாவது சர்வதேச தூதர்கள் தினம் அக்டோபர் 24 / 2017 அன்று பிரேசில் நாட்டின் பிரேசிலியா நகரில் கடைபிடிக்கப்பட்டுள்ளது.
3.அமெரிக்காவின் Institute of Human Virology (IHV) வழங்கும் 2017 IHV வாழ்நாள் சாதனையாளர் விருது தென்னாப்பிரிக்காவில் வாழும் இந்திய வம்சாவளி தம்பதிகள் பேராசிரியர். சலீம் அப்துல் கரீம் மற்றும் குரேச்ஷா அப்துல் கரீம் ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது.


இன்றைய தினம்

1.இன்று சர்வதேச போர் மற்றும் ஆயுத மோதல்களின் சுற்றுச்சூழல் சுரண்டல் தடுக்கும் தினம் (International Day for Preventing the Exploitation of the Envirenment in war and Armed Confliet).
போர் மற்றும் ஆயுத மோதல்களால் இயற்கை பலவிதங்களில் சேதமடைகிறது. பயிர்கள், தண்ணீர் விநியோகம், தண்ணீர் விசமாதல், காடுகள் எரிதல், காடுகள் அழிக்கப்படுதல் போன்ற மோசமான பாதிப்புகள் ஏற்படுகின்றன. அது தவிர பல தொழில்நுட்பங்களும் அழிக்கப்படுகின்றன. சுற்றுச்சூழல் பாதிக்கக்கூடாது என்பதற்காக ஐ.நா. சபை 2001ஆம் ஆண்டில் இத்தினத்தை அறிவித்தது.

 

–தென்னகம்.காம் செய்தி குழு