இந்தியா

1.இதர பிற்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டை 21% லிருந்து 26%ஆக உயர்த்தும் சட்ட முன்வடிவு ராஜஸ்தான் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.இதன்மூலம் அம்மாநிலத்தின் மொத்த இட ஒதுக்கீடு 54% அளவிற்கு உயரும். இது உச்ச நீதிமன்றம் நிராணயித்த 50% அளவை விட அதிகமாகும்.
2.பேரிடர் ஆராய்ச்சிக்கான சிறப்பு மையத்தை, ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் மத்திய உள்துறை இணையமைச்சர் துவக்கி வைத்துள்ளார்.


உலகம்

1.சீனாவின் சூசோவு பகுதியில் தண்டவாளமே இல்லாமல் ஓடக் கூடிய ரயில் துவங்கப்பட்டுள்ளது.தண்டவாளங்களுக்குப் பதிலாக சாலையில் வெள்ளை நிறக்கோடுகள் பதியப்பட்டுள்ளது. இதை சென்சார்கள் மூலம் உணர்ந்து அதைப் பின்பற்றி மின்சக்தியின் உதவியுடன் இயங்குகிறது.இதில் ஒரே நேரத்தில் 300 பேர் பயணிக்கும் வகையில் உள்ளது. அதிகபட்சமாக 70 கி.மீ வேகம் கொண்ட இந்த ஸ்மார்ட் ரயில், 32 மீட்டர் நீளத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
2.ஆஸ்திரேலிய துணை பிரதமர் பார்னாபை ஜோய்ஸ் இரட்டை குடியுரிமை வைத்திருந்து ( ஆஸ்திரேலியா & நியுசிலாந்து குடியுரிமை ) தேர்தலில் போட்டியிட்ட காரணத்திற்காக அவரை தகுதி நீக்கம் செய்து அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
3.நெதர்லாந்து நாட்டின் தி ஹேக் நகரில் அமைந்துள்ள சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில்( International Criminal Court ) இருந்து உலகில் முதல் நாடாக, புருண்டி விலகியுள்ளது.


விளையாட்டு

1.கொல்கத்தாவில் அக்டோபர் 28ல் நடைபெற்ற 17 வயதிற்கு உட்பட்டோருக்கான FIFA உலக கோப்பை கால்பந்து இறுதிப் போட்டியில் ஸ்பெயினை வீழ்த்தி இங்கிலாந்து சாம்பியன் பட்டம் வென்றது.பிரேசில் 3-வது இடத்தை பெற்றுள்ளது.
2.சென்னையில் நடைபெற்ற 5-வது புரோ லீக் கபடி இறுதிப் போட்டியில் குஜராத் பார்ச்சுன் ஜெயன்ட்ஸ் அணியை 55-38 என வீழ்த்தி 3-வது முறையாக பாட்னா பைரட்ஸ் சாம்பியன் பட்டம் வென்றது.
3.சிங்கப்பூரில் நடைபெற்ற உலக டென்னிஸ் தரவரிசையில் முதல் 8 இடங்களில் இருக்கும் வீராங்கனைகளுக்கு இடையிலான உலக டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் டென்மார்க்கின் கரோலின் வோஸ்னியாக்கி , அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸ்ஐ வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.


இன்றைய தினம்

1.இன்று மேரி கியூரி பிறந்த தினம் (Marie Gurie Birth Day).
மேரி கியூரி 1867ஆம் ஆண்டு நவம்பர் 7 அன்று போலந்து நாட்டில் பிறந்தார். இவர் ரேடியம், பொலோனியம் போன்ற கதிர்வீச்சு மூலகங்களைக் கண்டுபிடித்தார். இவர் இயற்பியலுக்கான நோபல் பரிசினை 1903ஆம் ஆண்டிலும், வேதியியலுக்கான நோபல் பரிசினை 1911ஆம் ஆண்டிலும் பெற்றார். உலகில் இரண்டு பரிசுகளைப் பெற்ற முதல் பெண்மணி இவரே ஆவார்.

 

–தென்னகம்.காம் செய்தி குழு