இந்தியா

1.ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் , புதுடெல்லியில் 21st World Congress of Mental Health ஐ துவக்கி வைத்துள்ளார்.
2.2nd Aero Expo India 2017 ஐ துணை ஜனாதிபதி புதுடெல்லியில் துவக்கி வைத்துள்ளார்.
3.ஸ்ரீரங்கம் கோவிலில் பழமை மாறாமல் கும்பாபிஷேக திருப்பணிகளை மேற்கொண்டமைக்காக யுனெஸ்கோ விருதினை வழங்கி பாரட்டியுள்ளது.
4.53–வது ஞானபீட விருது பிரபல இந்தி எழுத்தாளர் கிருஷ்ணா சோப்திக்கு வழங்கப்பட்டுள்ளது.
5.விசாகப்பட்டினம் அருகே வரகா ஆற்றின் கரையில் அமைந்துள்ள எட்டிகொப்பகா என்ற கிராமத்தில் தயாரிக்கப்படும் மரத்திலான பொம்மைகளுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.
6.ஆதார் எண் இணைத்த, ரயில் பயணிகள் மாதத்திற்கு 12 டிக்கெட்டுகள் வரை ஆன்லைனில் முன்பதிவு செய்து கொள்ள ஐஆர்சிடிசி அனுமதி வழங்கியுள்ளது. அக்டோபர் 26ம் தேதியில் இருந்து இந்த புதிய நடைமுறை அமலுக்கு வந்தது.
7.தேசிய விளையாட்டு கொள்கைக்கு மாறாக, 3வது முறையாக அகில இந்திய கால்பந்து சம்மேளன தலைவராக பிரபுல் படேல் தேர்வு செய்யப்பட்டது செல்லாது என டெல்லி ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
புதிய தேர்தலை 5 மாத காலத்துக்குள் நடத்த வேண்டும் என்றும் அதுவரை அகில இந்திய கால்பந்து சம்மேளனத்தின் நிர்வாகியாக முன்னாள் தலைமை தேர்தல் கமி‌ஷனர் குரேஷியை நியமித்தும் உத்தரவு பிறப்பித்துள்ளது.
8.இந்திய கடற்படைக்கு சொந்தமான தீர் மற்றும் சுஜாதா என்ற இரு கப்பல்கள் மற்றும் இந்திய கடலோர காவல்படை கப்பலான சாரதி ஆகிய மூன்றும் நல்லெண்ண பயணமாக கொழும்பு துறைமுகம் சென்றுள்ளன.


இன்றைய தினம்

1.இன்று உலக நுரையீரல் அழற்சி தினம்(World Pneumonia Day).
நிமோனியா என்பது நுரையீரல் இழையங்களின் அழற்சியாகும். இது கிருமித்தொற்றினால் ஏற்படுகிறது. இதனால் இருமல், காய்ச்சல், அதிக வியர்வை, பசியின்மை அதிகளவு சளி மற்றும் அசௌகரிய நிலை என்பன காணப்படும். சிகிச்சை அளித்தால் பூரண குணமடையலாம். இந்த நோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த 2009ஆம் ஆண்டில் இத்தினத்தை உலக சுகாதார அமைப்பு அறிவித்தது.

 

–தென்னகம்.காம் செய்தி குழு