தமிழகம்

1.ஆண்டுதோறும் குருபகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு இடம் பெயரும்போது அந்தந்த ராசிக்குரிய நதிகளில் நடைபெறும் விழா, புஷ்கரம் திருவிழா ஆகும்.இந்த ஆண்டு குருபகவான் கன்னி ராசியில் இருந்து துலாம் ராசிக்கு இடம் பெயர்ந்துள்ளார். அதன்படி, துலா ராசிக்குரிய காவிரி நதியில் செப்.12-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை புஷ்கரம் விழா நடக்கிறது.144 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் விழா மகா புஷ்கரம் விழாவாக கருதப்படும். அவ்வகையிலும், காவிரியில் வரும் 12-ம் தேதி தொடங்கும் விழா, மகா புஷ்கரம் விழாவாக கொண்டாடப்படுகிறது.நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் உள்ள துலாக்கட்ட காவிரிக்கரையில் இந்த மகா புஷ்கர விழா சிறப்பாகக் கொண்டாடப்பட இருக்கிறது.


இந்தியா

1.மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் இந்திய விமானப்படைக்கு தேவையான ஒற்றை எஞ்சின் போர் விமானங்களை தயாரிக்க அதானி நிறுவனம், சுவீடனின் SAAB நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது.
2.Indira Gandhi Matritva Sahyog Yojana (IGMSY) என்ற பெயரில் 2010 முதல் செயல்பட்டு வந்த திட்டம் தற்போது Pradhan Mantri Matritva Vandana Yojana (PMMVY) என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.இத்திட்டத்தின்படி கருவுற்ற மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு பண உதவி , பயனாளிகளின் வங்கி கணக்கு மூலம் செலுத்தப்படும்.
3.மின்னல் தாக்குதலை பேரிடர் என மகாராஷ்டிரா அரசு அறிவித்துள்ளது.மின்னல் தாக்கி உயிரிழப்போரின் குடும்பத்திற்கு வழங்கப்பட்டுவந்த உதவித்தொகை ரூ 1.5 லட்சத்திலிருந்து, 4 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளது.
4.இந்தியா – நேபாள ராணுவங்கள் இணைந்து மேற்கொள்ளும் பயிற்சி சூர்யா கிரண் – 12, செப்டம்பர் 3 முதல் செப்டம்பர் 16 வரை Saljhandi-ல் அமைந்துள்ள நேபாள ராணுவ பயிற்சி பள்ளியில் நடைபெறுகிறது.
5.54 ஆண்டுகளுக்குப்பின் ஓடிஸா மாநில அரசின் சார்பில் அம்மாநிலத்தில் மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை(Saheed Laxman Nayak Medical College and Hospital (SLNMCH)) துவங்கப்பட்டுள்ளது. ஓடிஸாவில் மாநில அரசின் சார்பில் 1944, 1959 மற்றும் 1962ம் ஆண்டுகளில் மருத்துவ கல்லூரிகள் துவங்கப்பட்டுள்ளன.
6.Rajasva Gyan Sangam என்ற பெயரில், டெல்லியில் நடைபெற்ற பட்டய கணக்காளர்கள் (ஆடிட்டர்கள்) மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைத்துள்ளார்.


உலகம்

1.ஆகஸ்ட் 30ல் இந்தியா வந்த சுவிட்சர்லாந்து அதிபரின் பெயர் – டோரிஸ் லுதர்ட்.சுவிட்சர்லாந்து, இந்தியாவின் ஏழாவது மிகப்பெரிய வர்த்தக பங்குதாரராகவும், பதினோறாவது வெளிநாட்டு முதலீட்டாளராகவும் இருக்கிறது.
2018 செப்டம்பர் முதல் சுவிஸ் வங்கிகளில், இந்தியர்கள் செலுத்தியுள்ள பணம் பற்றிய விபரங்களை,சுவிட்சர்லாந்து இந்தியாவுக்கு அளிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
2.98% முஸ்லிம்கள் வாழும் தஜகிஸ்தான் நாட்டில், முஸ்லிம் பெண்கள் ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டுள்ளது.
3.லாக்கி ரேன்சம்வேர் ( Locky Ransomwere ) என்ற வைரஸ் இந்திய கம்யூட்டர்களைக் குறிவைத்துள்ளதாக இந்திய கம்யூட்டர் ஆய்வுக் குழு தகவல் தெரிவித்துள்ளது.


விளையாட்டு

1.பிரேசிலில் நடைபெற்ற World Cadets Chess Championship போட்டியில் நாக்பூரை சேர்ந்த பள்ளி மாணவி திவ்யா தேஷ்முக் 12 வயதுக்குட்பட்டவர்கள் பிரிவில் தங்கம் வென்றுள்ளார்.8 வயதுக்குட்பட்டவர்கள் பிரிவில் தமிழகத்தின் இளம்பாரதி 4 வது இடம் பெற்று வெண்கலம் வெல்லும் வாய்ப்பை இழந்துள்ளார்.


இன்றைய தினம்

1.1799 – பாஞ்சாலங்குறிச்சி கோட்டை பிரித்தானியரால் கைப்பற்றப்பட்டது.
2.1850 – கலிபோர்னியா 31-வது மாநிலமாக ஐக்கிய அமெரிக்காவில் இணைந்தது.

 

– தென்னகம்.காம் செய்தி குழு