இந்தியா

1.இந்தியா மற்றும் இந்தோனேஷியா கடற்படைகள் இணைந்த 30வது ஒருங்கிணைந்த ரோந்து மற்றும் 3வது இருதரப்பு பயிற்சிகள் இந்தோனேசியாவின் பெலோவான் பகுதியில் அக்டோபர் 24 முதல் நவம்பர் 05 வரை நடைபெறுகிறது.
2. டிஜிட்டல் முயற்சிகளை ( digital initiatives ) சிறப்பான அளவில் மேற்கொள்ளும் மாநிலங்களின் பட்டியலில் மத்திய பிரதேசம் முதலிடம் பெற்றுள்ளது .
3.தொலைத்தொடர்பு நிறுவனங்கள் வெளியிடும் கார்பன் அளவை 2019-20க்குள் 30% மற்றும் 2022-23க்குள் 40% அளவுக்கு குறைக்க வேண்டும் என ட்ராய் இலக்கு நிர்ணயம் செய்துள்ளது.
4.மேகாலயா மாநில தேர்தல் கமிசன் சார்பில், வாக்களர் சேர்த்தலை பிரபலப்படுத்த 2870 மாணவர்களை கொண்டு Unite (U and I towards Enrolment) என்ற மனித இலச்சினை உருவாக்கி சாதனை படைத்துள்ளனர். இது லிம்கா சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.
5.மத்திய மின்துறை மற்றும் ஜவுளித்துறை இணைந்து SAATHI (Sustainable and Accelerated Adoption of efficient Textile technologies to Help small Industries) என்ற திட்டத்தை அறிமுகம் செய்துள்ளன.மின்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள Energy Efficiency Services Limited (EESL) சார்பில் மின்சிக்கனத்துடன் கூடிய விசைத்தறிகள், மோட்டர்கள் மற்றும் உதிரிப்பாகங்கள் ஆகியவை சிறு மற்றும் நடுத்தர விசைத்தறி கூடங்களுக்கு வழங்கப்படும். இதற்கான தொகையை நான்கு முதல் ஐந்து ஆண்டுகளில் திருப்பி செலுத்த வேண்டும்.
6.நவம்பரில் டெல்லியில் நடைபெறவுள்ள உலக உணவுத் திருவிழாவின் முன்னிறுத்தல் மாநிலமாக ( Focus State ) ஒடிஷா இடம்பெறுகிறது.


உலகம்

1.பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் நிகரகுவா கையெழுத்திட்டுள்ளது.


விளையாட்டு

1.சர்வதேச டேபிள் டென்னிஸ் கூட்டமைப்பின் உலக ஜூனியர் தரவரிசை பட்டியிலில் இந்திய வீரர் மானவ் தாக்கர் முதலிடம் பிடித்துள்ளார்.


இன்றைய தினம்

1.2007 – ஆண்ட்ராய்டு செல்பேசி இயங்குதளம் வெளியிடப்பட்டது.

 

–தென்னகம்.காம் செய்தி குழு