தமிழகம்

1.திருப்பெரும்புதூரில் இயங்கி வரும் ராஜீவ் காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவனத்தின் புதிய இயக்குனராக ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த பேராசிரியர் மதன் மோகன் கோயல் பொறுப்பேற்றுள்ளார்.
2.தமிழகத்தில் நிகழாண்டு அரசு பொதுத் தேர்வில் தமிழ் வழிக் கல்வியில் சிறப்பிடம் பெறும் 960 மாணவ மாணவிகளுக்கு ரு.1.45 கோடியில் பரிசு மற்றும் காமராஜர் விருது வழங்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.
3.தமிழக அரசின் வருவாய் துறையின் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அத்துறை இனி வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை என அழைக்கப்படும். இதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
4.மதுரையில் 50 ,கோடி ரூபாய் மதிப்பீட்டில் தமிழ் கலாச்சார மரபு அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று தமிழக முதலமைச்சர் தெரிவித்துள்ளார் .
5.கன்னியாகுமரியை ஒட்டிய கடற்கரை பகுதிகளில் ஒவ்வொரு மாதமும் கடலோர காவல்படை மற்றும் கடலோர பாதுகாப்பு குழும போலீஸ் இணைந்த பாதுகாப்பு ஒத்திகை ஆபரேசன் சஜாக் நடைபெற்று வருகிறது.செப்டம்பர் மாதத்திற்கான ஒத்திகை கடந்த வாரம் நடைபெற்றது.


இந்தியா

1.மத்திய நிதி அமைச்சகம் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சோடியம் நைட்ரைட் மீது ஐந்தாண்டுகளுக்கு பொருள் குவிப்பு தடுப்பு வரி (Anti-dumping duty) விதித்துள்ளது.இதன்படி சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் சோடியம் நைட்ரைட் மீது டன் ஒன்றுக்கு 95 டாலர் மதிப்பிலான பொருள்குவிப்பு தடுப்பு வரியினை வருவாய்த்துறை விதிக்க இருக்கிறது.
2.கல்வி பயிலாத இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்த மகாராஷ்டிரா முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் நமோ யுவ ரோஜ்கர் கேந்திராவை மும்பையில் தொடங்கி வைத்துள்ளார்.
3.தெலுங்கானாவின் நிசாமாபாத்தில் மஞ்சளுக்கான நறுமணப்பொருள் பூங்கா அமைக்கப்படுவதற்கு மாநில அரசு முடிவெடுத்துள்ளது.
4.பஞ்சாப் அரசாங்கம், “அக்கறை பேணும் தோழமைத் திட்டம் “ (Care Companion Programme – CCP) என்ற திட்டத்தினை அறிமுகம் செய்துள்ளது.நோய்வாய்ப்பட்டவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கு கல்வி அளிப்பதன் மூலமாக நோயாளிகளை அக்கறையோடு கவனித்துக்கொள்ளும் தோழமையினை உருவாக்குவதே இந்தத் திட்டத்தின் நோக்கமாகும்.
5.M.S. சுப்புலட்சுமி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ரூ.10 மற்றும் ரூ.100 ஞாபகார்த்த நாணயங்களை வெளியிட மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.


இன்றைய தினம்

1.1957 – ஐக்கிய அமெரிக்கா நிலத்துக்கடியே தனது முதலாவது அணுகுண்டுச் சோதனையை நடத்தியது.

 

– தென்னகம்.காம் செய்தி குழு