இந்தியா

1.விமான ஊழியர்களிடம் மோசமாக நடந்தது கொள்ளும் பயணிகளுக்கு 3 மாதம் முதல் 2 ஆண்டுகள் வரை தடை விதிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
2.ஒவ்வொரு வங்கியும் தனது 10 % கிளைகளில் ஆதார் மையம் ஆகஸ்ட் 31க்குள் ஏற்படுத்த வேண்டும் என UIDAI உத்தரவிட்டு இருந்தது. தற்போது இதற்கான காலக்கெடு செப்டம்பர் 30 வரை நீட்டித்துள்ளது. அதற்குள் ஆதார் மையம் அமைக்காத வங்கி கிளைக்கு ஒவ்வொரு மாதமும் கிளைக்கு 20,000 வீதம் அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
3.நர்மதை ஆற்றின் நீராதாரத்தை பெருக்குவதன் மூலம் மாநிலத்தின் வளத்தை மேம்படுத்துவது பற்றிய விழிப்புணர்வு பிரச்சாரம்”நர்மதா மகோத்சவ யாத்ராவை” குஜராத் முதல்வர் துவக்கி வைத்துள்ளார்.
4.யானைகள் இடம்பெயர்வதற்கு வசதியாக இந்திய – வங்கதேச எல்லையில் அமைக்கப்பட்டுள்ள வேலிகளை நீக்கி 13 வழிகளை உருவாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.வங்கதேச எல்லையை ஒட்டி உள்ள மேகாலயாவில் 12 வழிகளும், அசாம் எல்லையில் 1 வழியும் உருவாக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
5.இந்தியாவில் உயிரிமருந்தியல் வளர்ச்சியினை மேம்படுத்தி ஊக்குவிக்க “Innovate in India (i3) – இந்தியாவில் புத்தாக்கம் செய்வோம் ” என்ற பிரச்சார இயக்கம் துவங்கப்பட்டுள்ளது.மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தினுள் உள்ள உயிரித்தொழில் நுட்பத்துறையின் கீழ் இயங்கும் பொதுத்துறையான உயிரித்தொழில் நுட்பத் தொழில் ஆராய்ச்சி உதவிக் குழுவினால் (BIRAC) இந்த இயக்கம் நடைமுறைப் படுத்தப்படுகின்றது.
6.உலகலாவிய சுற்றுச்சூழல் வசதிக்காக “சுற்றுசூழல் சேவை மேம்பாட்டு திட்டம்”என்ற திட்டத்தை இந்தியா உலக வங்கியுடன் இணைந்து 24.64 மில்லியன் அமெரிக்க டாலர் செலவில் செயல் படுத்துவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.இத்திட்டத்திற்கான கால அளவு 5 ஆண்டுகள் ஆகும்.பசுமை இந்தியா தேசிய திட்டத்தின் கீழுள்ள இந்திய வன ஆராய்ச்சி மற்றும் கல்வி குழுவினால் சத்திஸ்கர் மற்றும் மத்திய பிரதேஷ் மாநிலங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


உலகம்

1.மைக்ரோசாப்ட் தலைமை செயல் அதிகாரி சத்யா நாதெள்ள Hit Refresh என்ற புத்தகத்தை எழுதியுள்ளார்.பில் கேட்ஸ் இதற்கு முன்னுரை எழுதியுள்ளார்.


விளையாட்டு

1.இந்திய ஹாக்கி அணியின் பயிற்சியாளராக , தற்போது பெண்கள் அணி பயிற்சியாளராக பணியாற்றிவரும் சோஜெர்ட் மரிஜென் நியமிக்கப்பட்டுள்ளார்.உயர் செயல்திறனுக்கான பயிற்சியாளராக ஹரேந்திரா சிங் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
2.ஆஸ்திரேலியா கோல்டு கோஸ்ட் நகரில் நடைபெற்ற காமன்வெல்த் சீனியர் பளு தூக்குதலில் தமிழக வீரர் சதிஷ் தங்கம் வென்றுள்ளார்.
3.ஏதென்ஸ் நகரில் நடைபெறும் உலக கேடட் மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் மகளிர்க்கான 56 கிலோ பிரிவில் 15 வயதான இந்திய வீராங்கனை சோனம் மாலிக் தங்கம் வென்றுள்ளார்.


இன்றைய தினம்

1.இன்று தெற்கு – தெற்கு ஒத்துழைப்பு ஐக்கிய நாடுகள் தினம் (United National Day for South – South Cooperation).
நிதி, உணவுப் பொருட்கள், வெப்பநிலை மாற்றம் ஆகியவற்றால் உலக அளவில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகள், வளரும் நாடுகள் மத்தியில் அதிக ஒத்துழைப்பை ஏற்படுத்துகின்றன. தெற்கு – தெற்கு வியாபாரம், முதலீடு போன்றவை உயர்ந்துள்ளன. அதே சமயத்தில் வெப்ப நிலை மாற்றத்திற்கு எதிரான நடவடிக்கைகளில் முக்கிய பங்காற்ற வேண்டியுள்ளது. டிசம்பர் 19 அன்று கொண்டாடப்பட்ட இத்தினம் ஐ.நா. வால் செப்டம்பர் 12ஆம் தேதிக்கு 2012 இல் மாற்றப்பட்டது.
2.1848 – சுவிட்சர்லாந்து கூட்டமைப்பு ஆட்சியை நடைமுறைப்படுத்தியது.

 

– தென்னகம்.காம் செய்தி குழு