இந்தியா

1.குஜராத்தின் நர்மதா மாவட்டத்தில் ராஜ்பிப்லா நகரில் பழங்குடியினருக்கான பிரத்யோக பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டுள்ளது. அதன் பெயர் பிர்சா முண்டா பழங்குடியினர் பல்கலைக்கழகம்.
2.மத்திய குழந்தைகள் மற்றும் பெண்கள் நலத்துறை அமைச்சகம், பாலின சமத்துவத்தை வலியுறுத்தி, சமூக வலைத்தளங்களில் women for women : #IamThatWoman என்ற பிரச்சாரத்தை துவக்கியுள்ளது.
3.இந்திய விமானப்படையின் சேவையில் இருந்து விடுவிக்கப்பட்ட போர் விமானம் TU142M ஐ அருங்காட்சியமாக மாற்ற விசாகப்பட்டினத்தில் சந்திரபாபு நாயுடு அடிக்கல் நாட்டியுள்ளார்.
4.சக்சம் திட்டத்தின் ( Saksham Yojna ) மூலம் மகளிர் சுய உதவி குழுவினருக்கு வழங்கப்படும் கடனுக்கான வட்டி விகிதம் 6.5 %லிருந்து 5 % ஆக குறைக்கப்படுவதாக சட்டீஸ்கர் மாநில அரசு அறிவித்துள்ளது.
5.LNG Producer – Consumer Conference 2017 ஜப்பானில் அக்டோபர் 17 -18ல் நடைபெற்றுள்ளது.இந்தியா சார்பில் மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கலந்து கொண்டுள்ளார்.


உலகம்

1.இரண்டாவது செர்ரி திருவிழா ஷில்லாங்கில் நடைபெறவுள்ளது.
2.சீனாவுக்கான இந்திய தூதராக கெளதம் பம்ப்வாலே நியமிக்கப்பட்டுள்ளார்.
3.பிரான்ஸ் நாடாளுமன்றம் தீவிரவாத தடுப்பு சட்டத்தை நிறைவேற்றியுள்ளது. இதன்மூலம் காவல்துறையினர் வாரண்ட் இல்லாமல் எந்தவொரு இடத்திலும் சோதனை செய்ய இயலும்.


இன்றைய தினம்

1.1420 – பெய்ஜிங் அதிகாரபூர்வமாக மிங் அரசின் தலைநகரானது.

 

–தென்னகம்.காம் செய்தி குழு