இந்தியா

1.இந்தியா சார்பில் முதன்முறையாக 1956 மெல்பேர்ன் ஒலிம்பிக் நீச்சல் போட்டியில் கலந்து கொண்ட ஷம்ஷெர் கான் வயது முதிர்வால் காலமானார். இவர் ஆந்திரா, குண்டூர் மாவட்டம் இஸ்லாம்பூரில் வசித்து வந்துள்ளார்.
2.மலையாள இலக்கியத்திற்கு சிறப்பான பங்களிப்பை வழங்கியதற்காக பத்ம பிரபா புஷ்காரம் விருது , பிரபா வர்மா விற்கு வழங்கப்பட்டுள்ளது.
3.கொங்கணி நடிகர் கோபால் கௌடாவிற்கு கலாகர் புரஷ்கார் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
4.நெடுநேரம் விவசாய பணிகளில் ஈடுபட்டு வரும் பெண்களுக்கு உதவும் வகையில் மகிந்திரா & மகிந்திரா நிறுவனம் Prerna திட்டத்தை ஒடிஷாவில் துவக்கியுள்ளது.
5.பஞ்சாப் மாநில காவல்துறை நடை ரோந்து திட்டத்தை ( Foot Patroling ) துவக்கியுள்ளது.
6.ரிசர்வ் வங்கியின் ஆலோசனையுடன் தங்கக் கடன் பத்திரங்களை மீண்டும் மத்திய அரசு அறிமுகப்படுத்தி உள்ளது. அக்டோபர் 9-ம் தேதி முதல் இந்த பத்திரங்களில் முதலீடு செய்யலாம். 2017-18 நிதியாண்டில் இரண்டாவது முறையாக தங்க கடன் பத்திரங்களை அரசு கொண்டு வருகிறது.இந்த திட்டத்தின் கீழ், தங்கக் கடன் பத்திரங்களில் ஒரு கிராம் மற்றும் அதன் மடங்குகளில் முதலீடு செய்யலாம். அதிகபட்சமாக ஒரு நபர் ஆண்டுக்கு 500 கிராம் வரை முதலீடு செய்யலாம். இந்து கூட்டுக் குடும்ப உறுப்பினர்கள் அதிகபட்சமாக 4 கிலோ வரையில் வாங்கலாம். டிரஸ்டுகள் 20 கிலோ வரையில் முதலீடு செய்ய அனுமதிக்கப்படும். தங்கக் கடன் பத்திரங்கள் முதன் முதலில் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் இதுவரை 9 முறை வெளியிடப்பட்டுள்ளது.
7.உத்திரபிரதேசத்தின் முகல்சராய் ரயில் நிலையம் , தீனதயாள் உபாத்யாய ரயில் நிலையம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
8. இந்திய ரயில்வேக்கு சொந்தமான அனைத்து ரயில்களிலும் ஆக்ஸிஜென் உருளைகளை கட்டாயம் வைக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


இன்றைய தினம்

1.இன்று உலக ஆடியோ பாரம்பரிய தினம் (World Day for Audiovisual Heritage).
யுனெஸ்கோ அமைப்பானது இத்தினத்தை 2005ஆம் ஆண்டில் அங்கீகரித்தது. ஆடியோ ஆவணங்களை பாதுகாப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இத்தினம் கொண்டாடுவதன் நோக்கம். தேசிய திரைப்பட ஆவணக் காப்பகம், ஆடியோ சங்கங்கள், தொலைக்காட்சி, வானொலி நிலையங்கள் மற்றும் அரசாங்கங்களுக்கு இடையே கூட்டு முயற்சி ஏற்படுத்த இத்தினம் முதன்முதலாக 2007இல் கொண்டாடப்பட்டது.

 

–தென்னகம்.காம் செய்தி குழு