தமிழகம்

1.விஐடி பல்கலைக்கழகம், வேலூர் தமிழ்சங்கம் மற்றும் மு.வ. அறக்கட்டளை இணைந்து வழங்கும் மு. வரதராசனார் விருது, பேராசிரியர் தி.சா. ராஜகோபலனுக்கு வழங்கப்பட்டுள்ளது.


இந்தியா

1.சுப்ரீம் கோர்ட்டின் 45-வது தலைமை நீதிபதியாக தீபக் மிஸ்ரா (63) இன்று பதவியேற்றுக்கொண்டார்.இவர் அடுத்த ஆண்டு அக்டோபர் 2–ந் தேதி வரை 13 மாதங்கள் பதவி வகிப்பார்.ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இவருக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.இவர் ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் ஆவார்.சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதியாக இருந்த ஜே.எஸ்.கேஹர் நேற்று ஓய்வு பெற்றதையடுத்து இன்று தீபக் மிஸ்ரா பதவியேற்றுக்கொண்டார்.
2.இந்தியாவின் முதல் ரயில்வே பேரிடர் மேலாண்மை கிராமம் (Railways disaster management village) பெங்களுருக்கு அருகில் உள்ள Hejjala கிராமத்தில் அமைக்கப்படவுள்ளது.
3.கேசரி நினைவு பத்திரிகையாளர் அறக்கட்டளை வழங்கும் முதலாவது கேசரி ஊடக விருது (First Kesari Media Award) T.J.S. ஜார்ஜ்க்கு வழங்கப்பட்டது.
4.இந்திய – நேபாள எல்லையில் மெச்சி ஆற்றின் குறுக்கே ரூ.159 கோடியில் பாலம் அமைக்க நேபாள அரசுடன் ஒப்பந்தம் மேற்கொள்ள மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது. இந்த திட்டத்தை தேசிய நெடுஞ்சாலை மற்றும் உள்கட்டமைப்பு வளர்ச்சி கழகம் செயல்படுத்தும்.
5.இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) கடல்சார் ஆராய்ச்சிக்காக ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். வரிசையில் இதுவரை 7 செயற்கைகோள்களை விண்வெளிக்கு அனுப்பி உள்ளது.இதில் முதலில் செலுத்தப்பட்ட செயற்கைகோளின் ஆயுள் காலம் நிறைவடைய விருப்பதை தொடர்ந்து, புதிதாக ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். 1-எச் என்ற செயற்கைகோளை இஸ்ரோ வடிவமைத்து உள்ளது.இதனை ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி-39 ராக்கெட் மூலம் 31-ந்தேதி விண்ணில் செலுத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.
6.ஏர் இந்தியா நிறுவனத்தின் இடைக்கால (3 மாதங்களுக்கு) தலைவராக ராஜிவ் பன்சால் IAS நியமிக்கப்பட்டுள்ளார்.
7.மத்திய விளையாட்டு அமைச்சகம் சார்பில் , இந்தியாவின் முதல் விளையாட்டு அருங்காட்சியகம் டெல்லி ஜவஹர்லால் நேரு விளையாட்டு மைதானத்தில் அமைக்கப்பட உள்ளது.இந்தியாவில் ஏற்கனவே புனே மற்றும் சென்னையில் கிரிக்கெட் அருங்காட்சியகமும், கொல்கத்தாவில் பல விளையாட்டு அருங்காட்சியகம் உள்ளது. மேற்கண்ட மூன்றும் தனிநபர்கள் / அமைப்புகளால் ஏற்படுத்தப்பட்டவை ஆகும்.


உலகம்

1.2014க்கு பின் போலியோ பாதிப்பு ஏற்படாதது உறுதி செய்யப் பட்டதையடுத்து ஆப்ரிக்க நாடுகளில் ஒன்றான சோமாலியாவை, போலியோ இல்லாத நாடாக, உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது.
2.சர்வதேச விண்வெளி நிலையத்தில் செயல்படும் விதத்தில் Hewlett Packard Enterprise (HPE) என்ற நிறுவனம் சூப்பர் கம்ப்யூட்டரை உருவாக்கி, அதற்கு The Spaceborne Computer என பெயரிட்டுள்ளது.இந்த சூப்பர் கம்ப்யூட்டர், பால்கன் 9 ராக்கெட் மூலம் புளோரிடாவில் உள்ள கேப்கேனரவல் ஏவுதளத்தில் இருந்து விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது.
3.ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் ஆகஸ்ட் 24 முதல் செப்டம்பர் 03 வரை 40 நாடுகளின் ராணுவ இசைக் குழுவினரின் திருவிழா(International Military Music Festival) நடைபெற்று வருகிறது.இதற்கு Spasskaya Tower என பெயரிட்டுள்ளனர்.


விளையாட்டு

1.கேரளாவின் புகழ் பெற்ற 65-வது நேரு கோப்பை படகுப் போட்டியில் துருத்திபுரம் போட் கிளப் அணி வெற்றி பெற்றுள்ளது.


இன்றைய தினம்

1.1845 – சயன்டிஃபிக் அமெரிக்கன் முதலாவது இதழ் வெளிவந்தது.

 

– தென்னகம்.காம் செய்தி குழு