தமிழகம்

1.பள்ளிக்கல்வித்துறையின் முதன்மைத்துறை செயலாளராக பிரதீப் யாதவ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.உதயசந்திரன் பள்ளிக்கல்வித்துறை செயலாளராக நீடிக்கிறார்.பள்ளிக்கல்வித்துறைக்கு தற்காலிக முதன்மை செயலாளர் என்ற புதிய பணியிடம் உருவாக்கப்பட்டுள்ளது.தமிழக அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.


இந்தியா

1.கல்வி, வேலைவாய்ப்புக்கான இடஒதுக்கீட்டு சலுகையை பெறுவதற்கு, பிற்படுத்தப்பட்டோரின் வருமான உச்சவரம்பை ரூ.8 லட்சமாக உயர்த்த மத்திய மந்திரிசபை ஒப்புதல் வழங்கியுள்ளது.இதற்கு ஓ.பி.சி. சான்றிதழ் அவசியம் ஆகும்.
2.இந்திய பெருங்கடல் கடற்படை கருத்தரங்கு (Indian Ocean Naval Symposium – IONS) சார்பில் பங்களாதேஷ் முன்னிலையில் இந்தியா , பாகிஸ்தான் மற்றும் சீன கடற்படைகள் இணைந்து முதலாவது சர்வதேச கடல்சார் தேடுதல் மற்றும் மீட்பு பயிற்சியில் ஈடுபட உள்ளன.இதற்கு IMMSAREX(International Maritime Search and Rescue Exercise) என பெயரிடப்பட்டுள்ளது.
3.இந்தியா – ஆசியான் நட்புறவு பேச்சுவார்த்தையின் 25ம் ஆண்டை முன்னிட்டு , இந்தியா – ஆசியான் இளைஞர் மாநாடு போபாலில் நடைபெற்று முடிந்துள்ளது.இந்த மாநாட்டின் கருப்பொருள் Shared Values, Common Destiny ஆகும்.
4.2018ம் ஆண்டிற்குள் 25,000 பெண் தொழில் முனைவோர் மற்றும் மகளிர் சுயஉதவி குழுவினர்களுக்கு இணையவழி விற்பனை உத்திகளை கற்றுக் கொடுக்க ஒடிஷா மாநில அரசு, முகநூலுடன் (Facebook) ஒப்பந்தம் செய்துள்ளது.இதற்கு SheMeansBusiness திட்டம் என பெயரிட்டுள்ளனர்.


வர்த்தகம்

1.இன்போசிஸ் நிறுவனத்தில் நிர்வாகம் அல்லாத தலைவராக நந்தன் நீலகேனி நியமிக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.


உலகம்

1.மேற்கு ஆஸ்திரேலிய பல்கலைக்கழக விஞ்ஞானிகளும், ஜப்பானில் உள்ள தொகோகு பல்கலைக்கழக ஆஸ்பத்திரியின் நிபுணர்களும் இணைந்து குறை பிரசவத்தில் பிறக்கும் குழந்தைகளை காப்பாற்ற உதவும் செயற்கை கருப்பை உருவாக்கி சாதனை படைத்துள்ளனர்.
2.கனடா வாழ் அமெரிக்கரான வர்த்தகர் எல்கான் முஸ்க் செவ்வாய் கிரகத்தில் காலனி அமைக்க போவதாக அறிவித்துள்ளார். அதற்காக ஒரு நபருக்கு ரூ.65 ஆயிரம் கோடி (10 மில்லியன் டாலர்) கட்டணமாக செலுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.
3.உயிரினங்கள் வாழ மிகவும் அவசியமான ஆக்சிஜனை செவ்வாய் கிரகத்தில் உருவாக்க நாசா மையம் திட்டமிட்டுள்ளது. அதற்காக அங்கு பாசி இனங்கள் அல்லது பாக்டீரியாவை அனுப்ப முடிவு செய்துள்ளது.2020-ம் ஆண்டில் அமெரிக்காவின் நாசா மையம் செவ்வாய் கிரகத்துக்கு புதிதாக ஒரு விண்கலம் அனுப்புகிறது. அத்துடன் பாக்டீரியா அல்லது பாசி இனங்கள் அனுப்பப்படுகின்றன. அங்கு இவை ஆக்சிஜனை உற்பத்தி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
4.பிரிட்டன் நாட்டின் பிரபல தொலைக்காட்சி சேனலான ‘சேனல்-4’ நடத்திய அறிவுத்திறன் போட்டியில் இந்திய வம்சாவளியை சேர்ந்த ராகுல் தோஷி சிறார் மேதை (Child Genius) விருதினை வென்றுள்ளார்.
5.சிறிய வகை செயற்கைகோள்களை (Cube Sat) செலுத்த , தண்ணீரில் இயங்க கூடிய உந்து விசை சக்தியை (Propulsion System) அமெரிக்காவின் Purdue பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இதற்கு FEMTA(Film-Evaporation MEMS Tunable Array) என பெயரிட்டுள்ளனர்.


சிறப்பு செய்திகள்

முத்தலாக் தீர்ப்பு

இஸ்லாமிய மதத்தை சேர்ந்த திருமணம் ஆன ஒரு ஆண், தனது மனைவியை மூன்று முறை தலாக் கூறி பெறப்படும் விவாகரத்தை (முத்தலாக் நடைமுறை) சட்டவிரோதமானது என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியுள்ளது.
இந்த வழக்கை தொடர்ந்தவர்கள் :
சாயிராபானு என்பவர் உள்ளிட்ட முஸ்லிம் பெண்கள் 5 பேர் மற்றும் 2 அமைப்புகள்.
இந்த வழக்கை விசாரித்தவர்கள் :
01) சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர் ( சீக்கியர்) ,
02) நீதிபதி குரியன் ஜோசப் ( கிறிஸ்துவர்),
03) நீதிபதி ரோகின்டன் பாலி நாரிமன் ( பார்சி ),
04) நீதிபதி உதய் உமேஷ் லலித் ( இந்து),
05) நீதிபதி அப்துல் நஜீர் ( முஸ்லிம்)
ஆகிய 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு.
5 நீதிபதிகள் அமர்வில், 3 நீதிபதிகள் குரியன் ஜோசப், ரோகின்டன் பாலி நாரிமன், உதய் உமேஷ் லலித் ஆகியோர் முத்தலாக் முறை சட்டவிரோதமானது என்று தீர்ப்பளித்தனர்.
தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர், நீதிபதி எஸ்.அப்துல் நஜீர் ஆகிய இருவரும் இது தனிச்சட்டம் தொடர்புடையது. இதில் கோர்ட்டு தலையிட முடியாது என்று கருத்து தெரிவித்தனர்.
3:2 என்ற பெரும்பான்மை அடிப்படையில் 3 நீதிபதிகள் அளித்த முத்தலாக் நடைமுறை செல்லாது, அது அரசியல் சட்டத்துக்கு விரோதமானது என்ற தீர்ப்பே இறுதி தீர்ப்பாக அமைந்தது.


இன்றைய தினம்

1.1920 – ஐக்கிய அமெரிக்காவில் பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டது.

 

– தென்னகம்.காம் செய்தி குழு